Labels

rp

Blogging Tips 2017

பொதுத்தேர்வு ஏற்பாடு; அதிகாரிகள் ஆலோசனை


அரையாண்டு தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு உடனடி தேர்வு நடத்துவது, பொதுத்தேர்வு ஏற்பாடு குறித்து, தலைமை ஆசிரியர்களுடன் கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.
திருப்பூர் குமார் நகர் பிஷப் உபகாரசாமி பள்ளியில், பொதுத்தேர்வு குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. பிளஸ் 2 பொதுத்தேர்வு கூடுதல் மையங்கள் ஏற்படுத்துவது குறித்து, இதில் ஆலோசிக்கப்பட்டது. நடப்பாண்டில் சின்னசாமியம்மாள் மாநகராட்சி பள்ளி, அவிநாசி அரசு பெண்கள் பள்ளி, குண்டடம் அரசு பள்ளி ஆகியன, புதிய தேர்வு மையங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.தற்போது, பள்ளிகளில் அரையாண்டு தேர்வு நடைபெற்று வரும் நிலையில், இதில், தேர்ச்சி பெறாத பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு ஜன., மாதத்தில் உடனடி தேர்வு நடத்துவது தேர்வு குறித்தும், தலைமை ஆசிரியர்களிடம் கருத்து கேட்கப்பட்டது.திருப்புதல் தேர்வுகள் தொடர்ந்து நடத்தப்பட உள்ளதாக ஆசிரியர்கள் தரப்பில் தெரிவித்ததால், உடனடி தேர்வு குறித்து ஆலோசித்து, பின்னர் அறிவிக்கப்பட உள்ளது. வரும் பொதுத்தேர்வில் அனைத்து பள்ளிகளும் நூறு சதவீதம் தேர்ச்சி பெற வேண்டும் என, இக்கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.
வரும் 20ம் தேதி, பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு குறித்த இரண்டாம் கட்ட ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் "நாமினி ரோல்' எண்கள், தேர்வு மையங்கள் பிரிப்பு, செய்முறை தேர்வு மற்றும் உடனடி தேர்வு குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.ஆலோசனை கூட்டத் துக்கு, முதன்மை கல்வி அலுவலர் முருகன் தலைமை வகித்தார். மாவட்ட கல்வி அலுவலர் கரோலின் முன்னிலை வகித்தார்.அரசு மேல்நிலை பள்ளிகள், அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகள், மாநகராட்சி மற்றும் தனியார் மேல்நிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment