Labels

rp

Blogging Tips 2017

மேலாண்மை பயிற்சியால் தேர்வு பாதிக்கும்: ஆசிரியர்கள் புகார்


பள்ளி மேலாண்மை குழு பயிற்சியால் அரை ஆண்டு தேர்வு பாதிக்கப்படும்' என ஆசிரியர்கள் புகார் தெரிவித்துள்ளனர்

அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், அனைத்து துவக்க, நடுநிலைப்பள்ளிகளில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு மூன்று நாள் பயிற்சி அளிக்கப்படுகிறது.


இப்பயிற்சி முதல் கட்டமாக, வரும், 15ம் தேதி முதல், 17ம் தேதி வரையும், அடுத்த கட்டமாக,

18ம் தேதி முதல், 20ம் தேதி வரையும் நடக்கிறது. இப்பயிற்சியால் அரை ஆண்டு தேர்வு பாதிக்கப்படும் என புகார் எழுந்துள்ளது.

தமிழகத்தில் ஈராசிரியர் பள்ளிகளே அதிக அளவில் உள்ளன. பள்ளிகளில் அரை ஆண்டு தேர்வு வரும், 18ம் தேதி முதல் 23ம் தேதி வரை நடக்க உள்ளது. இதற்காக ஆசிரியர்கள் ஆயத்த பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

பள்ளி மேலாண்மை குழு பயிற்சிக்கு ஒரு ஆசிரியர் செல்ல வேண்டும். அப்போது ஒரே ஆசிரியர் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு தேர்வு நடத்த வேண்டும். ஆயத்த பணிகளில் ஈடுபட வேண்டும்.

இதனால், அரை ஆண்டு தேர்வு பணி பாதிக்கும். எனவே பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கான பயிற்சியை அரை ஆண்டு தேர்வுக்கு பின் நடத்த வேண்டும்.

No comments:

Post a Comment