Labels

rp

Blogging Tips 2017

மாணவி கொடூர கொலை எதிரொலி தேர்வு எழுதிய பிறகு மாணவர்களை மதியம் வீட்டிற்கு அனுப்பக் கூடாது

வேலூர் மாவட்டத்தில் உயர்நிலைப் பள்ளிகளில் அரையாண்டுத் தேர்வு எழுதி முடிந்ததும், 6, 9ம் வகுப்பு மாணவர்களை மதியம் வீட்டிற்கு அனுப்பக்கூடாது என்று மாவட்ட கல்வி அலுவலர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் கே.வி.குப்பம் அருகே மாச்சனூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி கீர்த்திகா பாலியல் வன்முறை கொடுமை யால் கடந்த 16ம் தேதி கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த கொலையை அதே பள்ளியில் படிக்கும் பத்தாம் வகுப்பு மாணவன் செய்துள்ளான் என்றும் தெரியவந்தது.
அவனை போலீசார் கைது செய்தனர். இதுபோன்று வன்முறைகளை தவிர்ப்பதற்கு வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்ட கல்வி அலுவலர்கள் அனைத்து உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் சில அறிவுரைகளை வழங்கி உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக வேலூர் மாவட்ட கல்வி அலுவலர்கள் தலைமை ஆசிரியர்களிடம் கூறியதாவது: வேலூர் மற்றும் திருப்பத்தூர் கல்வி மாவட்டத்தில் உள்ள அனைத்து உயர்நிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளை, பள்ளி நேரம் முடியும் வரை வெளியே அனுப்பக் கூடாது.
தற்போது 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை அரையாண்டு தேர்வு நடந்து வருகிறது. பெரும்பாலான பள்ளிகளில் காலை தேர்வு முடிந்ததும், மதியம் வீட்டிற்கு மாணவர்களை அனுப்பி விடுகின்றனர். ஆனால் மாணவர்கள் வீட்டிற்கு தான் செல்கி றார்களா? என்று தெரியவில்லை.
எனவே தேர்வு முடிந்த பிறகும், வகுப்பறையிலே மாணவ, மாணவிகள் அமர்ந்திருக்க வேண்டும்.
மாவட்ட கல்வி அலுவலர்கள் உத்தரவு
எனவே தேர்வு முடிந்த பிறகும், வகுப்பறையிலே மாணவ, மாணவிகள் அமர்ந்திருக்க வேண்டும்.
மதியம் நேரத்தில் மாணவர்களை வெளியே அனுப்பக்கூடாது. பள்ளிகள் முடிந்தபிறகு அனைத்து மாணவ, மாணவிகளையும் ஒட்டுமொத்தமாக வெளியே அனுப்பவேண்டும். பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு நல்ல எண்ணங்களை வளர்க்கும்படி கருத்துக்களை கூறவேண்டும்.
வகுப்பறையில் எப்போதும் ஆசிரியர்கள் இருக்கவேண்டும். மாணவ, மாணவிகளுக்கு இருக்கும் பிரச்னைகளை ஆசிரியர்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.
ஒரு மாணவனோ, மாணவியோ பள்ளிக்கு வரவில்லை என்றால், உடனடியாக அவர்களது பெற்றோர்களிடம், ஏன் பள்ளிக்கு வரவில்லை என்று கேட்க வேண்டும் என்றனர்.

No comments:

Post a Comment