Labels

rp

Blogging Tips 2017

பள்ளி மாணவர்களுக்காக முதல் இணைய அறிவுக்களஞ்சியம்: தமிழக கல்வித்துறை தொடங்குகிறது

இந்தியாவிலேயே முதல் முறையாக பள்ளி மாணவர்களுக்கான இணைய தகவல் களஞ்சியம் தொடங்குவதென பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
இதில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவர் களுக்குத் தேவையான தகவல்கள் தொகுக்கப்படும். பள்ளி, கல்லூரி மாணவர்கள் தங்கள் கல்விக்காக இணையதளங்களை நாடுவது அதிகரித்துள்ளது. இந்நிலையில் பல தகவல்கள் தமிழில் கிடைப் பதில்லை. மேலும், பாடத்திட்டத் துக்கு தேவையான தகவல்கள் அனைத் தையும் அவை உள்ளடக்கியிருப்ப தில்லை.
இந்த நிலையை உணர்ந்த பள்ளி கல்வித்துறை

6 மாவட்ட கலெக்டர்கள் மாற்றம்

தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள உத்தரவின்படி, தேனி மாவட்ட கலெக்டராக உள்ள பழனிச்சாமி திருச்சி மாவட்ட கலெக்டராகவும், திண்டுக்கல் மாவட்ட கலெக்டராக உள்ள வெங்கடாசலம் தேனி மாவட்டத்திற்கும் மாற்றப்பட்டுள்ளனர். விருதுநகர் கலெக்டராக உள்ள ஹரிஹரன் திண்டுக்கல்

இடைநிலை ஆசிரியர் ஊதியம் குறித்த நீதிமன்ற தீர்ப்பும்,”அதனை அமுலாக்கமுடியாது “ என்ற நிதிச்செயலர் கடிதமும் - ஓர் அலசல் கட்டுரை
பயிற்சிகளால் பள்ளி செயல்பாடுகளில் பாதிப்பு

பள்ளிக்கல்வித்துறை - கல்வித் தகவல் மேலாண்மை முறை - பள்ளிகள், மாணவர்கள், ஆசிரியர்களின் தகவல் தொகுப்பு விவரங்களை இணையதளத்தில் 2014-15ம் ஆண்டிற்கு மேம்படுத்துதல் சார்ந்த திட்ட இயக்குனரின் அறிவுரைகள்

பாரத ரத்னா விருது பெறும் வாஜ்பாய் வாழ்க்கை குறிப்பு

வாஜ்பாய் மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் நகரில் 1926-ம் ஆண்டு டிசம்பர் 25-ந்தேதி (கிறிஸ்துமஸ் நாளில்) பிறந்தார். அவருடைய தந்தையின் பெயர் பண்டிட் கிருஷ்ணபிகாரி வாஜ்பாய். அவர் பள்ளி ஆசிரியர். குவாலியரில் தொடக்கக்கல்வி பயின்ற வாஜ்பாய் பின்னர், விக்டோரியா கல்லூரியில் சேர்ந்து பி.ஏ. பட்டம் பெற்றார். பின்னர், முதுகலைப்படிப்பிற்காக கான்பூரில் உள்ள பல்கலைக்கழகத்தில் சேர்ந்து அரசியல் விஞ்ஞானத்தில் முதுகலைப்பட்டம் பெற்றார். பின்னர், சட்டக்கல்லூரியில் சேர்ந்தார்.
பதவியில் இருந்து ஓய்வு பெற்ற அவருடைய தந்தையும், சட்டம் பயில விரும்பி அதே கல்லூரியில் சேர்ந்தார். தந்தையும்,

கல்வித்துறைக்கு பெருமை தேடித்தர வேண்டும் - அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுரைகள் மற்றும் வாழ்த்துக்கள் கூறி பள்ளிக்கல்வி இயக்குநர் முனைவர் திரு.கண்ணப்பன் அவர்கள் கடிதம்

குடும்ப பிரச்னையால் அரசுப் பணிகளில் பதவி உயர்வை மறுக்க முடியாது: உயர் நீதிமன்றம் உத்தரவு

குடும்ப பிரச்னையை காரணமாகக் கொண்டு அரசு ஊழியரின் பதவி உயர்வை மறுக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு மின் உற்பத்தி, மின் பகிர்மானக் கழகத்தில் உதவி தணிக்கை அதிகாரியாக பணிபுரிபவர் ஏ.வேலுசாமி. அவருக்கு 2004-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
இதன் பிறகு, அவருக்கும் அவரது மனைவிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில் மனைவியிடமிருந்து விவாகரத்து கோரி வேலுசாமி திருச்சியில் உள்ள குடும்பநல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

ஆசிரியர் சமுதாயத்திற்கு தொடர்ந்து இழைக்கப்படும் அநீதி... தேவை உடனடி ஆசிரியர் பணிபாதுகாப்பு சட்டம்...

ஆசிரியர்கள் மீது மாணவர்கள்,பெற்றோர்கள்,அவர்களின் உறவினர்கள்,சமுதாயத்தை சேர்ந்தவர்கள்,மத அமைப்பினர் என்று தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்,ஆசிரியர்களை கைது செய்யும் சம்பவங்களும் அடிக்கடி நிகழ்கின்றன...
தற்போது கூட பெரம்பலூரில் பள்ளியில் விசில் அடித்த மாணவனை உடற்கல்வி ஆசிரியர் கண்டித்ததால் மாணவன் தற்கொலை செய்துகொள்ள,ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்...

எங்கே செல்கிறது மாணவ சமுதாயம்: தலைமை ஆசிரியரை தாக்கிய மாணவன்

பரமக்குடி அருகே நயினார்கோவில் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியரை, மாணவர் ஒருவர் தாக்கியதாக புகார் செய்யப்பட்டு உள்ளது. பரமக்குடி அருகே பகைவென்றியை சேர்ந்த மணி, 20, நயினார்கோவில் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படிக்கிறார்.
நேற்று காலை 11 மணிக்கு தலைமை ஆசிரியர் முருகன், ஆங்கில பாடத்திற்கு சிறப்பு வகுப்பு நடத்தினார். அப்போது மணி, தனது நோட்டில் இருந்த காகிதத்தை கிழித்து கீழே போட்டுக்கொண்டே இருந்தார்.

வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க வாய்ப்பு

வேலைவாய்ப்பு பதிவினை புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு புதுப்பித்தல் சலுகை வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் எ. சுந்தரவல்லி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி:
2011, 2012, 2013-ஆம் ஆண்டுகளில் வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு புதுப்பித்தல் சலுகை வழங்க தமிழக

தேசிய திறனறித் தேர்வு (NMMS) 24.01.2015 சனிக்கிழமையன்று ஒத்திவைக்கப்பட்டுள்ளது

எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு 27.12.2014 அன்று நடைபெறவிருந்த தேசிய திறனறித் தேர்வு (NMMS) 24.01.2015 சனிக்கிழமையன்று ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தொடக்கக் கல்வி துறையில் பணிபுரியும் ஒருவர் பள்ளிக் கல்வி துறைக்கு செல்லும்போது புதிய CPS பெறவேண்டுமா அல்லது பழைய எண்ணில் செலுத்தலாமா ?

திறனறி மதிப்பீடு முறை -ஆசிரியர்கள் எதிர்ப்பு -திரும்ப பெற வேண்டும்

தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கிடையில் பிளவு ஏற்படுத்த கல்வித்துறை முயற்சி

தமிழக அரசு ஊழியர்களின் பணித்திறனை (Performance) மதிப்பிடுவது எந்தவொரு துறையிலும் நடைமுறையில் இல்லை. பணி நியமனம் செய்வது போட்டித்தேர்வின் மூலமாகவோ அல்லது வேலைவாய்ப்பு பதிவு மூப்பின்படியோ நியமிக்கப்படுகிறார்கள். 

பதவி உயர்வு மற்றும் ஊக்க ஊதிய உயர்வு என்பது கூடுதல் கல்வித்தகுதி துறைத்தேர்வு மற்றும் பணிமூப்பு அடிப்படையில் அளிக்கப்படுகிறது

NMMS. தேர்வு குறித்த விழிப்புணர்வு இல்லை - மாணவர் பங்கேற்பில்லாத அவலநிலை

கோவை மாநகராட்சி கல்வி அதிகாரிகளுக்கும், உயர்நிலை மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கும், என்.எம்.எம்.எஸ்., தேர்வு குறித்த விழிப்புணர்வு இன்மையால், 23 மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்கள் ஒருவரும் பங்கேற்க இயலாத அவலநிலை ஏற்பட்டுள்ளது.

தேசிய வருவாய் வழி திறன் உதவித்தொகை திட்டத்தில், (என்.எம்.எம்.எஸ்.,) தேர்வு எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. நடப்பு கல்வியாண்டுக்கான தேர்வு ஜன., 3ம் தேதி நடக்கவுள்ளது. இத்தேர்வுக்கு மாணவர்கள் தங்களை தயார்படுத்தி வருகின்றனர்.

வாட்ஸ் அப்பில் பரவிய வழிப்பறி சம்பவம்: ஆசிரியையிடம் கத்தியை காட்டி நகை பறித்தவர் தூத்துக்குடியில் சிக்கனார்

எஸ்எஸ்எல்சி மாணவர்களின் பெயர் பட்டியல் பிரவுசிங் சென்டரில் தயாரிக்க பள்ளிகளுக்கு தடை

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வுக்கு மாணவர் பெயர் பட்டியல் தயாரிக்கும் பணிகளை தனியார் பிரவுசிங் சென்டரில் மேற்கொள்ள பள்ளிகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வரும் மார்ச் மாதம் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வுகள் நடைபெற உள்ளன.
இதற்காக தகுதியுள்ள மாணவ-மாணவியர் கொண்ட பட்டியல் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.இதுதொடர்பாக

மத்திய, மாநில அரசுத் துறை அலுவலகங்கள்தனியார் இ-மெயில் சேவைகளை பயன்படுத்த வேண்டாம்: அரசுத் துறைகளுக்கு அறிவுறுத்தல்

தனியார் இ-மெயில் சேவைகளை அலுவலகப் பணிகளுக்கு உபயோகப்படுத்த வேண்டாம் என்று அரசுத் துறைகள், அமைச்சர்களை மத்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. பிரபலமான சில தனியார் இ-மெயில் சேவைகளில் பகிரப்படும் முக்கியத் தகவல்கள், ரகசியங்கள் வெளியே கசிய வாய்ப்பு இருப்பதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

அரசு ஊழியர்கள் சொத்து விவரம் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு மீண்டும் நீட்டிப்பு


லோக்பால், லோக் ஆயுக்த சட்டத்தின்படி, மத்திய அரசு ஊழியர்கள், அதிகாரிகள் தங்களின் சொத்து விவரங்களை கட்டாயமாகத் தாக்கல் செய்ய டிசம்பர் 31-ஆம் தேதி வரை நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடு, தற்போது அடுத்த ஆண்டு (2015) ஏப்ரல் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை மத்திய பணியாளர் துறை வியாழக்கிழமை பிறப்பித்துள்ளது.

ஆன்-லைன் மூலம்ஆசிரியையின் வங்கி கணக்கில் இருந்து ரூ.43 ஆயிரம் சுருட்டல்

ஆசிரியையின் வங்கி கணக்கில் இருந்து ஆன்-லைன் மூலம் ரூ.43 ஆயிரம் சுருட்டியது தொடர்பான புகாரை வாங்க மறுத்து, கேளம்பாக்கம் போலீசார் அலைக்கழித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் வசிப்பவர் அனுராதா (வயது 35). இவர் மதுராந்தகத்தில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்க்கிறார். இவரது கணவர் வெளிநாட்டில் வேலை செய்கிறார்.

கிறிஸ்துவ சகோதரர்கள் அனைவருக்கும் TNTF-ன் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்.

பள்ளி மாணவன் சாவில் மர்மம் : பிரேத பரிசோதனைக்கு பெற்றோர் நிபந்தனை

தனியார் பள்ளியில், இறந்த மகன் உடலை, அரசு மருத்துவமனை டாக்டர்கள் குழுவினர், வீடியோ பதிவுடன் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும்' என, திருச்சி மாவட்ட எஸ்.பி., ராஜேஸ்வரியிடம், பெற்றோர் கோரிக்கை விடுத்தனர்.
கடலூர் மாவட்டம், நெய்வேலி அடுத்த சேப்பலானத்தம் வடக்கு பகுதியை சேர்ந்தவர் ராமநாதன். என்.எல்.சி.,யில் டெக்னீஷியனாக உள்ளார். இவரது மனைவி அம்பிகா. இவர்களுக்கு, இரண்டு மகன்கள்,

குரூப்-4 தேர்வில் 10 லட்சம் பேர் போட்டி; உணர்த்துவது என்ன?

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் - 4 பணிகளுக்கான தேர்வுகளில், 10 லட்சத்திற்கும் அதிகமானோர் பங்கேற்று இருக்கின்றனர். அரசுப் பணிகள் தேர்வு என்றாலே, லட்சக்கணக்கில் பங்கேற்கும் போக்கு அதிகரித்திருப்பதன் அடையாளம் இது; வேலைவாய்ப்பும் குறைவாக உள்ளது என்பதையும் காட்டுகிறது.

பள்ளி வகுப்பறைகளில் ஆசிரியர்கள் கற்றல் மற்றும் கற்பித்தலில் புதிய உத்திகள் கையாண்டிருந்தால், அவற்றை இணையதளத்தில் பதிவுசெய்ய மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.

கடந்த 2012 முதல் பள்ளிக் கல்வியில் தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறை மற்றும் முப்பருவ முறை அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதனை மேலும் வலுப்படுத்த வகுப்பறைகளில் ஆசிரியர்கள் கற்றல், கற்பித்தல் மேம்படுத்துவதற்காகவோ, மாணவர்களின் முழுமையான திறன் வளர்ச்சிக்காகவோ, பள்ளியின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காகவோ ஏதேனும் புதிய உத்திகளை செயல்படுத்தியிருப்பார்கள்.

சுற்றுச்சூழல் நிதி பயன்பாடு; தொடக்க பள்ளிகள் தாமதம்

மதுரை மாவட்டத்தில் சுற்றுச்சூழல் நிதியை செலவிடுவதில் அரசு தொடக்கப் பள்ளிகள் போதிய ஆர்வம் காட்டு வதில்லை என புகார் எழுந்துள்ளது.
மாவட்ட சுற்றுச்சூழல் மன்றம் சார்பில் பள்ளிகளில் மரக்கன்று, மூலிகை செடி வளர்ப்பு, பசுமை பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்

பாலியல் வன்முறைகளை தடுக்கஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி

பாலியல் வன்முறைகளை தடுக்க ஆசிரியர்கள், மாணவர்களுக்கு விழிப்புணர்வூட்டும் குழுக்கள் அனைத்து மாவட்டங்களிலும் அமைக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் பாலியல் வன்முறைகள் அதிகரித்து வருகிறது. இதனால் ஏற்படும் பிரச்னைகளை சமாளிப்பதற்கும், ஆசிரியர்கள், மாணவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு மாவட்டத்திலும் கலெக்டர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.

கையினால் எழுதப்பட்ட பாஸ்போர்ட்டுகள், ஒட்டப்பட்ட புகைப்படம் கொண்ட பாஸ்போர்ட்டுகள் சர்வதேச அளவில் கடந்த மாதம் 24ம் தேதி முதல் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது.பாஸ்போர்ட் சிறப்பு முகாம் வரும் 27ம் தேதி சென்னை சாலிகிராமத்தில் உள்ள பாஸ்போர்ட் சேவா கேந்திராவில் நடக்கிறது.

கையால் எழுதப்பட்ட, குறைந்த பக்கங்கள் கொண்ட மற்றும் காலாவதி தேதி நெருங்கிய பாஸ்போர்ட்தாரர்களுக்கான சிறப்பு முகாம் சென்னையில் வரும் 27ம் தேதி நடக்கிறது. கையினால் எழுதப்பட்ட பாஸ்போர்ட்டுகள், ஒட்டப்பட்ட புகைப்படம் கொண்ட பாஸ்போர்ட்டுகள் சர்வதேச அளவில் கடந்த மாதம் 24ம் தேதி முதல் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களை வெளிநாடுகள் தங்கள் நாட்டுக்குள் நுழைய அனுமதி மறுப்பதுடன் அத்தகையவர்களுக்கு விசாவும் வழங்க மறுக்கிறது. எனவே, குறிப்பிடப்பட்ட அந்த தேதியையும் தாண்டி கையினால் எழுதப்பட்ட பாஸ்போர்ட்டுகளை வைத்திருப்பவர்கள் வேறு பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து பெற்றுக்கொள்ள வேண்டும

குரூப்-2 தேர்வுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வு 29-ந்தேதி நடைபெறும் : டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு

குரூப்-2 தேர்வுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு வருகிற 29-ந்தேதி நடைபெறும் என்று டி.என்.பி.எஸ்.சி. தெரிவித்துள்ளது.

குரூப்-2 தேர்வுக்கான கலந்தாய்வு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

ஆசிரியர்கள் பிஎப் தணிக்கை விவகாரம் 63 தொடக்க கல்வி அலுவலர்களுக்கு நோட்டீஸ்

ஊரா ட்சி மற்றும் நகராட்சி பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் சேமநல நிதி கணக்கு தொடர்பாக, அரசு தகவல் தொகுப்பு விவர மையத்தில் பதிவு செய்யும் பணி நடக்கிறது.
ஆனால், தொடக்க கல்வித்துறையின் கீழ் செயல்படும் அனைத்து பள்ளிகளிலும் பணியாற்றும் ஆசிரியர்களின் சேமநல நிதி கணக்குகள் 2013-14ம் ஆண்டு வரை உள்ள விவரங்களை ஒன்றியம் வாரியாக தகவல் தொகுப்பு ஆணையருக்கு அனுப்பி வைக்கின்றனர்.

உயர்கல்வித் துறை செயலாளராக செல்வி அபூர்வா நியமனம்
உயர் கல்வித் துறைச் செயலாளராக செல்வி அபூர்வா நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து தலைமைச் செயலாளர் கே.ஞானதேசிகன்

செவ்வாய்க்கிழமை வெளியிட்ட உத்தரவு:
(அதிகாரிகள் முன்பு வகித்த பதவி அடைப்புக் குறிக்குள்)

செல்வி அபூர்வா-உயர்கல்வித் துறைச் செயலாளர்

தொகுதி 4 பணியிடத்திற்கு நடைபெற்ற தேர்விற்கான விடைகள் தேர்வாணையத்தினால் வெளியிடப்பட்டுள்ளது

Tamil Nadu Open University B.Ed & B.Ed(SE) Term End Examination Results December 2014

எரிவாயு மானியம் பெற உங்கள் ஆதார் எண் இணைக்கப்பட்டு விட்டதா என அறிய ...

காஸ் மானியத்துக்கு வங்கி கணக்கு இணைப்பை அறிவது எப்படி?

Dial *99*99# from your Mobile handset -பி.எஸ்.என்.எல்.

சமையல் காஸ் மானியம் பெற, வங்கிக் கணக்கு இணைக்கப்பட்டு விட்டதா என்பதை அறிய, பி.எஸ்.என்.எல்., நிறுவனம், இலவச எஸ்.எம்.எஸ்., சேவையை அறிமுகம் செய்துள்ளது. இச்சேவையை, ஆதார் எண் உள்ளவர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும்.

அ.தே.இ-பத்தாம் வகுப்பு தேர்வு கால அட்டவணையில் மாற்றம் இல்லாத நிலையில், கடந்த வாரத்தில் சில செய்தித்தாள்கள் வெளியிட்ட செய்தி தவறானது என தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு

தொடக்கக் கல்வி - பள்ளி மாணவர்கள் மனச்சிதைவு காரணமாக தற்கொலை செய்து கொண்டவர்களின் விவரம் கோரி உத்தரவு

ஆசிரியர் தேர்வு வாரியம் - கணினி பயிற்றுநர்களுக்கான பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்புதல் சார்ந்த தேர்வு நடத்துதல் மற்றும் சான்றிதழ் சரிப்பார்ப்புகான ஆய்வு கூட்டம், 26.12.2014 அன்று சென்னையில் நடைபெறும் ஆய்வு கூட்டத்தில் அனைத்து மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்கள் கலந்துகொள்ள இயக்குனர் உத்தரவு

இனி 'வணக்கத்திற்குரிய' இல்லை: 'மாண்புமிகு' மட்டும் தான் - தமிழக அரசு அரசாணை

தமிழகத்தில் உள்ள மேயர்களை இனி வணக்கத்திற்குரிய என்று அழைக்காமல், மாண்புமிகு மேயர் என அழைக்க வேண்டும் என்று தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள சென்னை மாநகராட்சி உட்பட 10 மாநகராட்சி மேயர்களும், வணக்கத்திற்குரிய மேயர் என்று அழைக்கப்படுகின்றனர்.

நிலுவையில் உள்ள கோப்புகளை முடிக்க அதிகாரிகளுக்கு கல்வித்துறை உத்தரவு

3 மாதங்களுக்கு மேல் நிலுவையில் உள்ள கோப்புகளை உடனடியாக முடிக்குமாறு மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரிகளுக்கு இயக்குநர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதுதொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குநர் ஆர்.இளங் கோவன், மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பி யுள்ள

சுங்கச்சாவடிகளில் பஸ், கார்களுக்கு சுங்க வரி விரைவில் ரத்து: புதிய திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு முடிவு

சுங்கச்சாவடிகளில் பஸ், கார்களுக்கு விதிக்கப்படும் வரியை விரைவில் ரத்து செய்ய மத்திய அரசு முடிவு செய்து இருக்கிறது. நாடு முழுவதும் நாற்கர சாலைகள் அமைக்கப்பட்ட பின்பு, சுங்கச்சாவடிகள் வழியாக செல்லும் பஸ், கார், ஜீப், வேன் மற்றும் அனைத்து வர்த்தக வாகனங்களுக்கும் சுங்க வரி வசூலிக்கப்படுகிறது.

டிட்டோஜாக் உயர்மட்ட அளவிலான கூட்டம் ஜனவரி-4ல் நடைபெறும் என தகவல் ??????

இடைநிலை ஆசிரியர் ஊதியம் சார்பான தமிழக அரசு தெரிவித்துள்ள கருத்தையடுத்து தொடக்கப்பள்ளி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான டிட்டோஜாக் உயர்மட்ட அளவிலான கூட்டம் வருகிற ஜனவரி 4-ல் நடைபெறவுள்ளதென தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கான முறையான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

காலம் எங்கே போகிறது- நம்மை நாம் அறிவோம், நமது மகிழ்ச்சிக்கு நாம் நேரம் ஒதுக்குவோம்.

இது அவசர உலகம். காலையில் எழுந்து பள்ளிக்கோ, கல்லூரிக்கோ, அலுவலகத்துக்கோ செல்வதில் இருந்து, மாலையிலோ இரவிலோ வீடு திரும்பும் வரை டென்ஷன்தான். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கவலை.
கவலையின் அளவு வேண்டுமானால் ஆளுக்கு ஆள் மாறுபடலாம். ஆனால், எல்லாருமே பிரச்னைகளைப் பற்றியே நினைத்துக் கொண்டு சிரிக்க மறந்து நாள்களை நகர்த்திக் கொண்டிருக்கின்றனர் என்பது மட்டும் உண்மை.
இதில், கிராமத்தில் வசிப்போர், நகரத்தில் வசிப்போர் என்ற பாகுபாடு கிடையாது. ஏழை, பணக்காரன் என்ற வேறுபாடு கிடையாது.

பாடமும் பாடதிட்டமும் இருக்கவேண்டும். ஆனால் அதை நடத்துகிற சுதந்திரம் ஆசிரியர்கள் கையில் இருக்க வேண்டும்.

சுதந்திரம் ஆசிரியர்கள் கையில் இருக்க வேண்டும் !
பாடமும் பாடதிட்டமும் இருக்கவேண்டும். ஆனால் அதை நடத்துகிற சுதந்திரம் ஆசிரியர்கள் கையில் இருக்க வேண்டும். காலகெடு இருக்க கூடாது. அனைத்து மாணவனும் முழு திறன் கிடைக்கும் வரை காலம் எடுத்துக்கொள்ள ஆசிரியர்களுக்கு வழிவகை செய்ய வேண்டும். ஆசிரியர் பணி தவிற மற்ற பணிகளில் அவர்களை ஈடுபடுத்தக்கூடாது. எந்த பள்ளியில் பணி செய்கிறார்களோ அந்த பள்ளியின் அருகில் அவர்களுக்கான இருப்பிடம் அமைத்து தரவேண்டும்

மூன்றாம் பருவ பாட புத்தகங்கள் வினியோகிக்கும் பணி துவக்கம்!

ஏழை மற்றும் நடுத்தர மாணவர்கள் கல்வி பயிலும் வகையில், அரசுப்பள்ளிகள் துவங்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இப்பள்ளிகளில், பயிலும் மாணவர்களின் கல்வித்தரம் மேம்பட அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. செயல்வழி கற்றல், படைப்பாற்றல் கல்வி போன்ற பல்வேறு புதிய யுக்திகளையும் புகுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழக அரசு முப்பருவ கல்வி முறையை அமல்படுத்தியது. இத்திட்டத்தின் படி,

10ம் வகுப்பு தனித்தேர்வர்கள் டிசம்பர் 24 வரை விண்ணப்பிக்கலாம்: தேர்வுத்துறை

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க தவறிய தனித்தேர்வர்கள், இன்று முதல், 24ம் தேதி வரை, விண்ணப்பித்துக் கொள்ளலாம் என, அரசுத் தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
கோவை வருவாய் மாவட்டத்தில், ஏழு சிறப்பு சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

அரையாண்டு தேர்வு,இரண்டாம் பருவத்தேர்வு இன்று முடிகிறது விடுமுறைக்கு பின் ஜன.2ல் பள்ளி திறப்பு

தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு வரை முப்பருவ பாடத்திட்டம் அமலில் உள்ளது. 2ம் பருவத்திற்கான தேர்வுகள் கடந்த 10 நாட்களாக நடந்து வருகின்றன. இன்று (செவ்வாய்) கடைசி தேர்வு நடக்கிறது. இதுபோல் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ்2 மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு போல் பொது வினாத்தாள் தயாரித்து வழங்கப்பட்டு அரையாண்டுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.

பத்தாம் வகுப்பு தேர்வு அட்டவணையில் மாற்றம் இல்லை: தேர்வுத்துறை அறிவிப்பு

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தொடர்பாக தேர்வுத்துறை வெளியிட்ட அட்டவணையில் திருத்தமோ மாற்றமோ செய்யவில்லை என்று தேர்வுத் துறை இயக்குநர் அறிவித்துள்ளார். பிளஸ் 2 பொதுத் தேர்வு மார்ச் 5ம் தேதியும், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 19ம் தேதியும் தொடங்கும் என்று கடந்த 4ம் தேதி அரசுத் தேர்வுகள் துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தது.
ஆனால், பத்தாம் வகுப்பு தேர்வு அட்டவணையில் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஒரு நாளிதழ் நேற்று முன்தினம் செய்தி வெளியிட்டு இருந் தது. அதில் 24ம் தேதி நடக்க உள்ள தமிழ் 2ம் தாள் தேர்வு 20ம் தேதியே நடக்கும் என்று குறிப்பிட்டு இருந்தது. இதனால் மாணவர்கள், பெற்றோர் குழப்பம் அடைந்தனர். இதையடுத்து, தேர்வுத்துறைக்கு மாணவர்கள் மட்டுமின்றி சில பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களும் தொடர்பு கொண்டு தகவல் கேட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த தேர்வுத்துறை நேற்று மறுப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.

இடைநிலை ஆசிரியர் ஊதியம் குறித்த நீதிமன்ற தீர்ப்பும்,”அதனை அமுலாக்கமுடியாது “ என்றநிதிச்செயலர் கடிதமும்-ஓர் அலசல் கட்டுரை-பொதுச்செயலர் செ முத்துசாமி


தவறாக பொருள் கொண்டு முடிவெடுத்த நிதித்துறை செயலரின் நடவடிக்கை மீதான பல சந்தேகங்கள் மற்றும்  விவாதக்கேள்விகளுக்கு விளக்கம் கேட்டு நிதிச்செயலருக்கு தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் சார்பிலான கடிதம்

Click Here to Download the  LETTER

திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலை ஒன்றியம் பெருங்காட்டூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் வகுப்பறை மற்றும் சுற்றுச்சுவர் சுவரோவியங்கள்
10ஆம் வகுப்பு பொதுதேர்வு அட்டவணையில் மாற்றமில்லை-jeya news

10ஆம் வகுப்பு பொதுதேர்வு அட்டவணையில் மாற்றமில்லை என தேர்வுத்துறை அறிவிப்பு,தவரான தகவல் வெளீயிட்டு மாணவர்களையும்,மக்களையும் குழப்பத்தில் ஆழ்த்தவேண்டாம் என ஊடகங்களுக்கு தேர்வுத்துறை இயக்குனர் வேண்டுகோள்

ஜனவரி முதல் வாரத்தில் டிட்டோஜாக் கூட்டம்?

இடைநிலை ஆசிரியர் அடிப்படை ஊதியம் 4200 என மாற்றம் செய்ய இயலாது என தமிழக அரசு நிதித்துறையின் அறிவிப்பாணையை தொடர்ந்து அடுத்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்க தமிழக தொடக்கப்பள்ளி ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு-டிட்டோஜாக் கூட்டம் ஜனவரி முதல் வாரத்தில் கூடும் என எதிர்பார்க்கப்படுவதாக நமபத்தகுந்த  வட்டார செய்திகள் தெரிவிக்கின்றன

புதிய குடும்ப அட்டை விண்ணப்பித்தோர் கவனத்துக்கு...

குடும்ப அட்டை கோரி மனு செய்தவர்கள் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் தகவல்கள் கிடைக்கப் பெறவில்லையெனில் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையாளர் அலுவலக இ-மெயில் முகவரிக்கு கோரிக்கை அனுப்பலாம் என்று உணவுத் துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
மேலும் இது குறித்து அவர் கூறியிருப்பதாவது, அலுவலர்களின் செல்லிடை பேசி மற்றும் இ-மெயில் முகவரிகள் இத்துறையின் இணைய தளத்தில் (www.consumer.tn.gov.in ) அளிக்கப்பட்டுள்ளது.

கணினி ஆசிரியர் பணிக்கு பி.எஸ்சி. படிப்பை பதிவு செய்யாமல் எம்.எஸ்சி., பி.எட். படிப்பை பதிவு செய்து இருந்தாலும் பரிந்துரைக்க வேண்டும் வேலைவாய்ப்பு அதிகாரிக்கு ஐகோர்ட்டு உத்தரவு


கணினி ஆசிரியர் பணிக்கு பி.எஸ்சி., படிப்பை பதிவு செய்யாமல் எம்.எஸ்சி., பி.எட்., படிப்பை பதிவு செய்து இருந்தாலும் பரிந்துரைக்க வேண்டும் என்று வேலைவாய்ப்பு அதிகாரிக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
ஐகோர்ட்டில் மனு
விருதுநகர் மாவட்டம் சாத்தூரை சேர்ந்தவர் கல்யாணி(வயது 41). இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:-
நான், 1993-ம் ஆண்டு பி.எஸ்சி கணினி அறிவியல் படிப்பையும், 1995-ம் ஆண்டு எம்.எஸ்சி., கணினி அறிவியல் படிப்பையும் முடித்தேன்.

2005–ம் ஆண்டுக்கு முன் அச்சிடப்பட்ட 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான ‘கெடு’ ஜனவரி 1–ந் தேதியுடன் முடிகிறது

2005–ம் ஆண்டுக்கு முன் அச்சிடப்பட்ட 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான ‘கெடு’ ஜனவரி 1–ந் தேதியுடன் முடிகிறது.
கள்ள நோட்டு ஒழிக்க..நாட்டில் கள்ள நோட்டுகளை ஒழிப்பதற்காக இந்திய ரிசர்வ் வங்கி ஒரு அதிரடி திட்டத்தை அறிவித்தது.

15 நாட்களில் குரூப் 1 தேர்வு தேதி அறிவிப்பு; வி.ஏ.ஓ. கலந்தாய்வு தள்ளிவைப்பு

குரூப் - 1 தேர்வு எப்போது என்பது, 15 நாட்களில் அறிவிக்கப்படும்; குரூப் - 2ஏ கலந்தாய்வு முடிந்த பின்னரே, வி.ஏ.ஓ., கலந்தாய்வு நடத்தப்படும் என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான - டி.என்.பி.எஸ்.சி., தலைவர் (பொறுப்பு) பாலசுப்ரமணியன் தெரிவித்தார்.  தமிழக அரசு துறைகளில், குரூப் - 4 பிரிவில், காலியாக உள்ள 4,963 பணியிடங்களுக்கான அறிவிப்பை, அக்., மாதம், டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டது.

2015-வருமான வரி கணக்கீட்டு படிவம் Excell-கோப்பாக

2014-2015 ஆம் ஆண்டுக்கான வருமான வரி கணக்கீட்டு படிவம் Excel-கோப்பாக
பதிவிறக்கம் செய்து பயன்படுத்தவும்

1.HRA- கழிக்கும் விதமாக
Click Here to Download for HRA Deduct-able user

2. HBA loan உள்ளவர்கள் வட்டியை கழிக்கும் விதமாக
Click Here to Download for HBA -INT-Deduct-able user
  
குறிப்பு-

பயன்படுத்திய பின் கருத்துக்களை கீழ்க்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு கருத்துக்கள் தவறாது அனுப்பவும் .அவை எளிய அனைவராலும் பயன்படுத்தும் இக்கோப்பை மேலும் மேம்படுத்த உதவும்.நன்றி

<rakshith2307@ymail.com>

என்னதான் இருக்கிறது பின்லாந்து கல்விமுறையில்?

பின்லாந்து என்ற நாடு, நோக்கியா அலைபேசிகளின் மூலம் நமக்குஅறிமுகம். நோக்கியா நிறுவனத்தின் தாய்நாடு பின்லாந்து. உலகஅளவில் 'கல்வியின் மெக்கா’ என அழைக்கப்படுவதும் அதே பின்லாந்துதான். அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் பொருளாதாரத்தில்எவ்வளவு மேம்பட்ட நிலையில் இருந்தாலும், அனைத்துபிரச்னைகளையும் தீர்ப்பதற்கான டாலர் என்ற மந்திரித்த தாயத்துவைத்திருந்தாலும், அவர்களால் கல்வியில் பின்லாந்துடன்போட்டிபோட முடியவில்லை.

மாணவி கொடூர கொலை எதிரொலி தேர்வு எழுதிய பிறகு மாணவர்களை மதியம் வீட்டிற்கு அனுப்பக் கூடாது

வேலூர் மாவட்டத்தில் உயர்நிலைப் பள்ளிகளில் அரையாண்டுத் தேர்வு எழுதி முடிந்ததும், 6, 9ம் வகுப்பு மாணவர்களை மதியம் வீட்டிற்கு அனுப்பக்கூடாது என்று மாவட்ட கல்வி அலுவலர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் கே.வி.குப்பம் அருகே மாச்சனூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி கீர்த்திகா பாலியல் வன்முறை கொடுமை யால் கடந்த 16ம் தேதி கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த கொலையை அதே பள்ளியில் படிக்கும் பத்தாம் வகுப்பு மாணவன் செய்துள்ளான் என்றும் தெரியவந்தது.

ஆந்திராவில் பரபரப்பு: விரிவுரையாளர் மீது கல்லூரி மாணவி ஆசிட் வீச்சு

ஆந்திரா மாநிலம் குண்டூர் அருகே திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிய விரிவுரையாளர் மீது கல்லூரி மாணவி ஆசிட் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குண்டூர் மாவட்டம் நல்லப்பாடு என்ற இடத்தில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் விரிவுரையாளர் பணி புரியும் வெங்கட்ரமணா என்பவர் கல்லூரியில் இருந்து வெளியே வந்த போது வாசலில் காத்து இ-ருந்த இளம்பெண் அவர் முகத்தில் ஆசிட் வீசியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த வெங்கட்ரமணா

கருணை அடிப்படையில் பணி நியமனம்: 18 வயது நிரம்பாதோர் மனுக்களைப் பரிசீலிக்க புதிய உத்தரவு

கருணை அடிப்படையிலான பணி நியமனத்தில், 18 வயதை நிறைவு செய்யாமல் பணியில் சேர்ந்தவர்களின் மனுக்களையும் பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசு புதிய உத்தரவு பிறப்பித்தது.

               அரசு ஊழியர்கள் பல்வேறு காரணங்களால் உயிரிழக்கும்போது, அவர்களின் வாரிசுகள் 18 வயது நிறைவடைவதற்கு முன்பே அரசுப் பணிக்கு விண்ணப்பித்து அதில் சேரும் நிலை இருந்து வருகிறது. ஆனால், அரசுப் பணியில் புதிதாக சேர்பவர்கள் அந்தப் பணிக்குரிய அனைத்து கல்வித் தகுதிகளையும் பெற்றிருப்பதுடன் 18 வயதையும் நிறைவு செய்திருக்க வேண்டும். இதுதொடர்பான உத்தரவை

இன்று குரூப் 4 தேர்வு: 13 லட்சம் பேர் எழுதுகிறார்கள்

தமிழகம் முழுவதும் குரூப் 4 தேர்வு ஞாயிற்றுக்கிழமை (டிச. 21)  நடைபெறுகிறது. இந்தத் தேர்வை 13 லட்சம் பேர் எழுதுகிறார்கள். இதற்கென மாநிலம் முழுவதும் 244 இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

               இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், நில அளவர், வரைவாளர் உள்ளிட்ட பணியிடங்கள் குரூப் 4 தொகுதியில் வருகின்றன. இந்தத் தொகுதியில் 4

               1, 963 பணியிடங்கள் காலியாகவுள்ளன. இந்தக் காலியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வுக்குரிய அறிவிக்கை கடந்த அக்டோபர் 14-ஆம் தேதி வெளியிடப்பட்டது. விண்ணப்பிக்க நவம்பர் 12 கடைசி நாள் என அறிவிக்கப்பட்ட நிலையில், 13 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். அவர்களுக்கான தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டிருந்தது.

பள்ளி வன்முறைக்கு எதிராக வீதிக்கு வந்த ஆசிரியர்கள்!

'ஆசிரியர்களுக்கும், பள்ளிகளின் உடைமைக்கும் பாதுகாப்பு அளிக்கும் வகையில், தமிழக அரசு உடனடியாக சட்டத்திருத்தங்களை மேற்கொள்ளவேண்டும்' என்ற கோரிக்கையை வலியுறுத்தி, ஆசிரியர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

           தமிழகத்தில், நாளுக்கு நாள் பள்ளிகளில் நடக்கும் வன்முறையின் காரணமாக, ஆசிரியர்கள் பீதியில் உள்ளனர். இதனால், பள்ளியில் நடக்கும் வன்முறை சம்பவங்களுக்கு எதிராகவும், அரசின் கவனத்தை ஈர்க்கும் விதத்திலும், கோவை செஞ்சிலுவை சங்கம் முன், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம், தமிழக தமிழாசிரியர்கள், தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி, தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் சங்கம் உள்ளிட்ட, 18 சங்கங்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆண்டு தோறும் அதிக அளவில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்த வேண்டும் : தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறையை மனதில் வைத்து ஆண்டு தோறும் அதிகளவில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்த வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் மடத்தூர் இந்து நடுநிலைப்பள்ளியைச் சேர்ந்த சித்ரா, திண்டிவனம் எம்.டி.கிரேனே நடுநிலைப் பள்ளியைச் சேர்ந்த ஜி.நாகராஜன் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.

web stats

web stats