Labels

rp

Blogging Tips 2017

அரையாண்டு தேர்வு முடிந்து நாளை பள்ளிக்கூடம் திறப்பு

அரையாண்டு தேர்வு முடிந்து இப்போது விடுமுறை நடைபெற்று வருகிறது. விடுமுறை முடிந்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிக்கூடங்கள் அனைத்தும் ஜனவரி 2-ந்தேதி திறக்கப்படுகின்றன. அன்றே பாடப்புத்தகங்கள் மற்றும் நோட்டு புத்தகங்கள் அனைத்தும் வழங்கப்பட உள்ளன. இதற்காக தமிழ்நாடு பாட நூல் நிறுவன நிர்வாக இயக்குனர் மைதிலி ராஜேந்திரன் அனைத்து மாவட்டங்களுக்கும் பாடப்புத்தகங்கள் மற்றும் நோட்டு புத்தகங்களை அனுப்பி வைத்துள்ளார்.

திட்டமிட்டபடி பாடப்புத்தகங்களும், நோட்டு புத்தகங்களும் மாணவ-மாணவிகளுக்கு பள்ளிக்கூடம் திறந்த 2-ந்தேதி காலையிலேயே வழங்கப்படும் என்றும் மொத்தம் 60 லட்சம் மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்படுகிறது என்றும் பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment