rp

Blogging Tips 2017

'மெட்ராஸ் ஐகோர்ட்' என்ற பெயர் சென்னை உயர் நீதிமன்றம் ஆகிறது

'மெட்ராஸ் ஐகோர்ட்' என இருப்பதை, சென்னை உயர் நீதிமன்றம் என மாற்றம் செய்ய, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதற்காக புதிய மசோதா தயாரிப்பில் ஈடுபட்டுள்ள மத்திய அரசு, 'பாம்பே ஐகோர்ட், கல்கத்தா ஐகோர்ட்' பெயர்களையும், அதன் இப்போதைய பெயருக்கு ஏற்ப மாற்றம் செய்ய உள்ளது.

தமிழகத்தின் தலைநகர் மெட்ராஸ், சென்னை எனவும், மகாராஷ்டிரா மாநிலத்தின் தலைநகரம் பாம்பே, மும்பை எனவும், 1995ம் ஆண்டில் மாற்றம் செய்யப்பட்டன. அதையடுத்து, மெட்ராஸ், பாம்பே என்ற பெயர்களில் இருந்த அரசு வளாகங்களின் பெயர்கள், சென்னை, மும்பை என மாற்றப்பட்டன. எனினும், மாநில உயர் நீதிமன்றங்களின் பெயர்கள் இன்னமும், பழைய பெயர்களிலேயே தொடர்கின்றன. குறிப்பாக, மெட்ராஸ் ஐகோர்ட் எனவும், பாம்பே ஐகோர்ட் எனவும் தான் அதிகாரபூர்வமாக அழைக்கப்படுகின்றன.
அவற்றின் பெயரை, சென்னை உயர் நீதிமன்றம், மும்பை உயர்நீதிமன்றம் என மாற்றம் செய்ய, பார்லிமென்டில் சட்டம் கொண்டு வர வேண்டும். இதற்கான கோரிக்கை, பல ஆண்டுகளாக நீடித்து வரும் நிலையில், மத்திய அரசு பெயர் மாற்றத்திற்கு முன்வந்துள்ளது.மத்திய நீதித்துறை பரிந்துரையின்படி, மசோதா தயாரிப்பு பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. அந்த மசோதா சட்டமானால், சென்னை உயர் நீதிமன்றம், மும்பை உயர் நீதிமன்றம் வரிசையில், கல்கத்தா ஐகோர்ட் என்ற பெயரும், கோல்கட்டா உயர் நீதிமன்றம் என மாற்றப்படும்.

No comments:

Post a Comment