rp

Blogging Tips 2017

வானில் ஒரு அதிசயம்

வானில் ஒரு அதிசயம் - இம்மாதம் முழுவதும் வானில் ஜொலிக்க இருக்கும் லவ்ஜாய் வால் நட்சத்திரம்!!--லவ்ஜாய் எனப்படும் வால் நட்சத்திரம் ஒன்று மரகத பச்சைக் கலரில் வானத்தில் வடக்கு திசையில் தோன்றியுள்ளது. இந்த வால் நட்சத்திரம் இன்று இரவு பூமிக்கு மிக அருகில் இருக்கும் என்றும், இதனை இந்த மாதம் முழுவதும் பார்க்கலாம் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இரவு நேரத்தில் வானத்தின் வடக்கு திசை நோக்கி பார்த்தால் இந்த வால் நட்சத்திரம் தெரியும். இந்த வால் நட்சத்திரத்தை அனைவரும் வெறும் கண்களால் பார்க்க முடியும், மீண்டும் இந்த வால் நட்சத்திரம் வானில் நம் பார்வைக்கு 8 ஆயிரம் ஆண்டுகள் கழித்துத்தான் தெரியும் என்று கூறுகிறார்கள்

No comments:

Post a Comment