rp

Blogging Tips 2017

04.02.2015 ஜாக்டோ கூட்டத்தில் நமது பொதுச்செயலரின் கோரிக்கை

நேற்று நடைபெற்ற ”ஜாக்டோ”எனபெயரிடப்பட்டுள்ள தொடக்கப்பள்ளி முதலான மேல்நிலைப்பள்ளிவரையில் பணியாற்றும் ஆசிரியர்கள் சார்ந்த ஆசிரியர்சங்க  கூட்டமைப்பின் கூட்டத்தில் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் சார்பில் பொதுச்செயலர் செ.முத்துசாமி ExMLC, கலந்து கொண்டார்
அவ்வமைப்பின் தீர்மானங்கள் வடித்தெடுக்கும் போது குறிப்பாக தொடக்கப்பள்ளியில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு,அவர்களின் ஊதியம் தமிழக அரசு 6வது ஊதியக்குழு அமுல்படுத்திய போது ஊதியக்கட்டு 2க்குபதில் 1ல் வைத்து அதாவது Payband-2(9300-34800) என்பதற்குப்பதில் Payband-1(5200-20200) என்று குறைத்து வைத்ததுடன் மத்திய அரசின் இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையான தரஊதியமான 4200க்கு மாற்றாக 2800 என அமுலாக்கப்பட்டதால் பெருத்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது.மேலும் இதனால் ஒவ்வொரு இடைநிலை ஆசிரியர்களும் மாதந்தோறும் ரூ11000/-வரை குறைவான ஊதியத்தை பெறுகிறார்கள்

மேலும் 1988 முதல் மத்திய அரசின் இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையான ஊதிஅத்தைபெற்றுவந்தவர்களுக்கு அது இப்போது மறுக்கப்பட்டுள்ளது.எனவே “ ஜாக்டோ “ அமைப்பின் பிரதான மற்றும் முதல் கோரிக்கையாக  தொடக்கப்பள்ளியில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசின் இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தை அமுலாக வேண்டும் என்ற கோரிக்கை இடம் பெற வேண்டும் என வலியுறுத்தினார்.
பின்னர் பேசிய பலர் முத்துசாமி,பாவலர் மீனாட்சி சுந்தரம்,மற்றும்,மாயவன் ஆகிய மூத்த சங்க நிர்வாகிகள் இளைய சமுதாய ஆசிரியர்சங்க பொறுப்பாளர்களுக்கு போராட்டகாலத்திலும் ,கோரிக்கை வென்றெடுக்க ஏதுவாக வழிகாட்டிகளாக அமையவேண்டும் எனகருத்து தெரிவித்தனர்

No comments:

Post a Comment