Labels

rp

Blogging Tips 2017

மார்ச்-8 மாவட்ட ஜாக்டோ பேரணிக்கு ஆயத்தமாவீர்-நாளை குறுவள மையகூட்டத்தில் கோரிக்கைகளோடு ஆசிரியர்களைசந்திப்பீர்-கே.பி.ரக்‌ஷித் மாநில துணைத்தலைவர்

அன்பார்ந்த ஆசிரியப்பேரினமே!
அலைகடலெனெ எழுந்திரு. இனியும் தூக்கம் வேண்டாம்.இதுவே தருணம். அரசு பேச்சுவார்த்த என அழைத்து நம் இனததின் இயக்க முன்னோடிகளை 3 மணி நேரம் காக்கவைத்து,கால்கடுக்க நிற்க வைத்து,மூவரை மட்டும் அழைத்து  ஜாக்டோ பொறுப்பாளர்கள் உடன் பேச நேரம் ஒதுக்கீடு வாங்கவில்லை என க்கூறி முறையாக வாங்கி வாருங்கள் என திருப்பிஅனுப்பிய கொடுமை ஒருபுறம் என்றால்,மறுநாள் தமிழ் இந்து நாளிதழில் செய்தியாக அப்பட்டமான பொய்யை,அனைவரையும் ஏமாற்றும் வண்ணம்ஜாக்டோ பிரதிநிதிகளை ,முதல்வர் அழைத்து பேசியதாகவும்,பொதுத்தேர்வுநேரத்தில் போராட்டம் வேண்டாம் என
முதல்வர் கோரியாதாகவும் கோரிக்கைகள் பரிசீலக்கப்படும் எனக்கூறியதாகவும் உடன் கல்வி அமைச்சர் ,கல்வித்துறை செயலர் இருந்ததாகவும் செய்தி,முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைத்ததைப்போன்று கட்டவீழ்த்து வெளியிடப்பட்டதன் நோக்கம்  அண்ணாவிற்கு பிறகு பட்டப்படிப்பை முடித்த முதல்வர் பன்னீர் அவர்களே அறிவார்.இத்தகு நிலைக்கு பின்னும் இன்னும் ஆசிரியர் இனம் வெகுண்டு எழ வேண்டாமா? மார்ச் -8 மாவட்டத்தலைநகர் பேரணிக்கு மகளிர் தினத்தில் மகளிர் கூட்டம் பெருந்திரளாகக்குடினால் அரசின் கவ்னம் ஈர்க்கப்பட்டு கோரிக்கைகள் கண்டிப்பாக நிறைவேறும்.எனவே நாளை நடைபெற்றும் குருவள மையத்தில் ஆசிரியர்பெருமக்களை சந்தித்து ஜாக்டோ பேர்ணிக்கு அழைப்பு விடுக்க இயக்க அடலேறுகளுக்கு தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி வேண்டுகோள் விடுக்கிறது.இயக்கம்பேதம் மறந்து இதுதான் தருணம் என ஜாக்டோ அமைப்பின் போராட்ட போர்வாள்களோடு இணைந்து நாளை பணியாற்றுவோம்.வெற்றி நமதே

அன்புடன் கே.பி.ரக்‌ஷித்,மாநில துணைத்தலைவர்

No comments:

Post a Comment