Labels

rp

Blogging Tips 2017

டிராய் புதிய நடவடிக்கை எதிரொலி: தொலைபேசி கட்டணங்கள் குறைகிறது

கைபேசி மற்றும் தரைவழி இணைப்பு தொலைபேசி கட்டணங்கள் அதிரடியாக குறைகின்றன. தொலைபேசி மற்றும் கைபேசி நிறுவனங்கள் மற்ற நிறுவனங்களின் எண்ணிற்கு வாடிக்கையாளர்கள் பேசும் போது அதற்காக தனி கட்டணம் வசூலிக்கின்றன. தற்போது இது நிமிடத்திற்கு 20 காசுகளாக உள்ளது. இந்த கட்டணத்தை தரைவழி இணைப்புகளுக்-கு முழுமையாக ரத்து செய்ய டிராய் எனப்படும் தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் முடிவு செய்துள்ளது. கைபேசிக்கு 14 காசுகளாக குறைக்கப்படுகிறது. இதையடுத்து கைபேசி மற்றும் தரைவழி இணைப்பு கட்டணங்கள் அதிரடியாக குறைகின்றன.

அத்துடன் தரைவழி இணைப்பு வாடிக்கையாளர்களுக்கு மாதந்தோறும் கூடுதலாக இலவச அழைப்புக்கள் கிடைக்கும் என டிராய் தெரிவித்துள்ளது. டிராயின் முடிவை ஏற்று தரைவழி இணைப்பு மற்றும் கைபேசி கட்டண விகிதங்களை குறைப்பதற்காக பணிகளை துவக்கி உள்ளதாக பி.எஸ்.என்.எல். அறிவித்துள்ளது. அதே சமயம் முன்னிலை கைபேசி நிறுவனங்களான ஏர்டெல், வோடபோன், ஐடியா ஆகியன டிராய் முடிவை பற்றி இதுவரை அறிவிப்பு ஏதும் வெளியிடவில்லை டிராயின் முடிவுக்கு இந்த நிறுவனங்கள் ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment