Labels

rp

Blogging Tips 2017

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி பெத்தநாய்க்கன் பாளையம் வட்டார பொறுப்பாளர்கள் இயக்குனரிடம் கோரிக்கை மனு அளிப்பு

சேலம் மாவட்டம் பெத்தநாய்க்கன் பாளையம் வட்டார செயலர்திரு துரை அரசன், வட்டார துனைசெயலர் திரு சி.நாகராஜன் ,மாவட்ட துணைச்செயலர்திரு இரா.ராஜா மற்றும் மாநிலதுணைத்தலைவர் திரு கோ.முருகேசன்  ஆகியோர் தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களை பொதுசெயலர் திருமிகு செ.முத்துசாமி அவர்களின் ஆலோசனையின் பேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
முன்னதாக பொதுச்செயலர் தொலைபேசி மூலம் வட்டாரப்பொறுப்பாளர்களின் கோரிக்கை மனு  மீதான விவரங்கள் இயக்குனருக்கு தெரிவிக்கப்பட்டன.கோரிக்கைகளை கனிவுடன் கேட்டு ,அதன்மீது விரைந்து நடவடிக்கை எடுப்பதாக இயக்குனர் உறுதி அளித்தார்
கோரிக்கைகள்
1. இடைநிலை  ஆசிரியராக இருந்து பதவி உயர்வு பெறும் போது  தனி ஊதியம் 750 சேர்ப்பது,தணிக்கைத்தடையால் இழப்பு ஏற்படுகிறது.அதனைக்களைய உடன்  வழிகாட்டுதல் செயல்முறை ஆணை வெளியிடக்கோருதல்
2. மலை சுழற்சி முறையில் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் மாறுதல் நியமனம்பணிமூப்பு படி 1 முதல் 49 வரை உள்ளவர்களுக்கு வழங்கப்பட்டபின் சுழற்சி மீண்டும் வரிசை எண் 1 முதல் தொடங்காமல் மீண்டும் 49 முதல் தலைகீழாக ஆனை வழங்கப்படுகிறது.இம்முரையற்ற செயலை உடன் தடுத்து நிறுத்தக்கோரப்பட்டது.உரிய விசாரணை மேற்கொண்டு சரியான முரையில் ஆணையிட வழிவகைசெய்வதாக இயக்குனர் உருதி அளித்தார்.

No comments:

Post a Comment