Labels

rp

Blogging Tips 2017

ஆதாருடன் இணைந்த வருகை பதிவேடு அறிமுகம்: மத்திய அரசு ஊழியர்கள் எதிர்ப்பு

ஆதார் எண்ணுடன் இணைந்த, விரல் ரேகை வருகைப் பதிவேடான பயோ மெட்ரிக் முறை, தமிழகம் மற்றும் புதுச்சேரி, வருமான வரித் துறை அலுவலகங்களில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம், வருமான வரித்துறை ஊழியர் மற்றும் அதிகாரிகளின் வருகைப் பதிவேடு, அவர்களின் ஆதார் விவரங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது.

ஆதாருக்கு சேகரிக்கப்பட்ட, ரேகை, வருகைப் பதிவேடு ரேகையுடன் ஒத்திருக்க வேண்டும். இல்லையேல், பணிக்கு வருவது பதிவு ஆகாது. ஆதார் எண் இல்லாத ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள், ஆதார் எண்ணை உடனடியாகப் பெற வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
இதுகுறித்து, வருமான வரித்துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஊழியர்கள், அதிகாரிகளின் ஆதார் விவரங்கள் தேசிய தகவல் மையத்தில் சேகரிக்கப்பட்டு உள்ளது. இம்மையத்தில் இருந்து, ஒவ்வொரு மத்திய அரசுத் துறைக்கும், இணைப்பு அளிக்கப்படுகிறது.
விரல் ரேகை:
இதில், அத்துறை ஊழியர்கள், அதிகாரிகளின் விரல் ரேகை வருகைப் பதிவேடும் சேர்க்கப்படுகிறது. நாள்தோறும், பணிக்கு வருவோர், விரல் ரேகை வருகைப் பதிவேட்டில், ரேகையைப் பதிவு செய்ய வேண்டும். இப்பதிவு, ஆதார் எண்ணுக்கு சேகரிக்கப்பட்ட, ரேகையோடு ஒத்துப் போக வேண்டும். டில்லியில் உள்ள வருமான வரித்துறை மற்றும் தபால் துறையில், இம்முறை அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. தற்போது, தமிழகம் மற்றும் புதுச்சேரி, வருமான வரித்துறை அலுவலகங்களில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. ஆதார் எண் இல்லாத ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள், ஆதார் எண்ணை உடனடியாகப் பெற வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். இவ்வாறு, அவர் கூறினார்.
வருகைப் பதிவேட்டுடன், ஆதார் எண்ணை இணைப்பதற்கு, மத்திய அரசு ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது குறித்து, ஊழியர் சம்மேளனத்தின் பொதுச் செயலர் துரைபாண்டி கூறியதாவது: பணியை ஒழுங்குபடுத்த, பயோ மெட்ரிக் முறையை அறிமுகம் செய்வதில், எங்களுக்கு மாற்று கருத்தில்லை. ஆனால், ஆதார் எண் விவரங்களை, வருகைப் பதிவேட்டில் இணைப்பது முறையற்றது. என் தனிப்பட்ட விவரங்களை, அலுவலக வருகைப் பதிவேட்டில் இணைப்பது, தனிமனித உரிமை மற்றும் சுதந்திரத்தைப் பறிப்பதாகும். உச்ச நீதிமன்றத் தீர்ப்பில், 'ஆதார் எண் விவரங்களை, தனிப்பட்ட முறையில் பயன்படுத்தக் கூடாது' என, கூறப்பட்டுள்ளது.
ஏற்க முடியாது:
இந்நிலையில், ஆதார் எண் மூலம், ஒரு ஊழியரின் ஜாதி, மதம், மொழி, அவரது குடும்பம் ஆகியவற்றை, அதிகாரி அறிந்து கொள்வதை ஏற்க முடியாது. ஆதார் எண் இல்லாத ஊழியர்கள், ஆதார் எண் பெறுவதில்லை என, முடிவு செய்துள்ளோம். இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment