Labels

rp

Blogging Tips 2017

புதுவையில் ரூ.1 கட்டணத்தில் பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கு சிறப்பு பஸ்கள்

தமிழகத்தில் மாணவர்கள் பள்ளி-கல்லூரி செல்ல இலவச பஸ் பாஸ் வழங்கப்பட்டுள்ளது. இலவச பஸ் பாஸை பயன்படுத்தி தமிழக அரசின் பஸ்களில் மாணவர்கள் பயணம் செய்யலாம். ஆனால், மாணவர்கள் பொதுமக்களுடன் சேர்ந்து தான் பயணம் செய்ய முடியும். மாணவர்களுக்கு என தனியாக பஸ்கள் இயக்கப்படுவதில்லை. இதனால் மாணவர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி அவதிக்குள்ளாகியே பயணம் செய்கின்றனர் அதே வேளையில் புதுவையில் மாணவர்களுக்கு தனி சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. மஞ்சள் நிறத்தில் இயக்கப்படும் இந்த பஸ்களில் மாணவர்கள் ரூ.1 கட்டணம் செலுத்தி பயணிக்கலாம்.

புதுவை மற்றும் காரைக்காலில் இந்த பஸ்கள் இயக்கப்படுகிறது. மாநிலத்தின் எல்லை பகுதியில் இருந்து புதுவையின் மைய பகுதி வரை எங்கு வேண்டுமானாலும் பள்ளி, கல்லூரிக்கு மாணவர்கள் செல்லலாம்.

மாணவர்களிடம் இருந்து அடையாளமாக ரூ.1 மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த திட்டத்தின்கீழ் புதுவையில் 60 பஸ்களும், காரைக்காலில் 11 பஸ்களும் இயக்கப்படுகிறது.

மாணவர்கள் மட்டுமே பயணம் செய்வதால் கூட்ட நெரிசலும் இல்லை. இதனால் மாணவர்கள் மட்டுமல்லாது பெற்றோர்களிடமும் இந்த திட்டம் வரவேற்பை பெற்றுள்ளது.

No comments:

Post a Comment