Labels

rp

Blogging Tips 2017

மத்திய அரசிடம் இருந்து உத்தரவு வரவில்லை : குறைந்தபட்ச பிஎப் பென்ஷன் ரூ.1,000 ரத்து????

 பிஎப் தொழிலாளர்களுக்கான குறைந்தபட்சம் ரூ.1,000 பென்ஷன் ரத்து செய்யப்படுவதாக தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் அறிவித்துள்ளது.  தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் சுமார் 6.5 லட்சம் கோடி தொழிலாளர் நிதியை நிர்வகித்து வருகிறது. இதில் சுமார் 5 கோடி தொழிலாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இவற்றில் குறைந்த சம்பள பிரிவில் உள்ள ஊழியர்கள் அதிகம். ஓய்வு பெற்ற பிறகு இவர்களுக்கு சில நூறு ரூபாய்களே பி.எப் ஓய்வூதியமாக கிடைக்கும். எனவே, இவர்கள் பயன்பெறும் வகையில் வருங்கால வைப்பு நிதி
சந்தாதாரர்களுக்கான குறைந்த பட்ச ஓய்வூதியத்தை ரூ.1,000ஆக நிர்ணயிக்க மத்திய அரசு முடிவு செய்தது.  தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவன (இபிஎப்ஓ) சந்தாதாரர்களுக்கு வருங்கால வைப்பு நிதி குறைந்த பட்சம் ரூ.1,000,மாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்டநாட்களாக இருந்தது. இதை மத்திய அரசு ஏற்று அதற்கான உத்தரவை ஏற்கெனவே பிறப்பித்தது. இதை தொடர்ந்து குறைந்த பட்ச ஓய்வூதியம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் செப்டம்பர் 1ம் தேதி முதல் நடைமுறைப்படுத்தி அறிவித்தது.  குறைந்த பட்ச ஓய்வூதியம் பெறுவதற்கான ஊதிய வரம்பு ரூ.6,500ஆக இருந்தது. இது ரூ.15 ஆயிரமாக மாற்றவும் நிதியமைச்சகம் அனுமதி அளித்தது. இந்த திட்டத்துக்கு மட்டும் மத்திய அரசுக்கு சுமார் ரூ.1,217 கோடி மானியம் வழங்குகிறது. நாடு முழுவதும் சுமார் 49 லட்சம் பேர் பிஎப் பென்ஷன் பெற்று வருகின்றனர். இவர்களில் குறைந்த பட்ச பென்ஷன் பெறுபவர்கள் சுமார் 32 லட்சம் பேர்.

 இந்நிலையில் இந்த குறைந்த பட்ச ஓய்வூதியத்தை ரத்து செய்வதாக பிஎப் நிறுவனம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ‘மார்ச் 31ம் தேதிக்கு பிறகு இந்த திட்டத்தை தொடர்வதற்கான அறிவிப்பு மற்றும் வழிகாட்டுதல் எதுவும் வராத நிலையில், இதை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, ஏப்ரல் 1ம் தேதி முதல் குறைந்தபட்ச பென்ஷன் தொகை பெறுபவர்களுக்கு, இதற்கு முன்பு வாங்கிய தொகையையே வழங்க முடியும்‘‘ என்று குறிப்பிட்டுள்ளது. தற்போது உள்ள பிஎப் முறையில் மாற்றம் கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக பட்ஜெட்டில் மத்திய அரசு அறிவித்தது.  அதன்படி, ஊழியர்கள் பிஎப் அல்லது புதிய பென்ஷன் திட்டம் இரண்டில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்து கொள்ளலாம். மேலும், பிஎப் தொகையில் ஊழியர்கள் பணம் செலுத்துவது கட்டாயமில்லை. அதேநேரத்தில் நிறுவனத்தின் சார்பில் அவருக்கு அளிக்கப்படும் பங்களிப்பில் எந்த மாற்றமும் கிடையாது. இஎஸ்ஐ திட்டத்துக்கும் இது பொருந்தும் என்று மத்திய அரசு கூறியிருந்தது. இந்த திட்டம் குறித்து அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.  அத்துடன் தொழிலாளர்களின் நிதியை பங்குச்சந்தையில் முதலீடு செய்யும் திட்டமும் அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு தொழிற்சங்கங்கள் பல எதிர்ப்பு தெரிவித்திருந்தன. அத்துடன் புதிய பென்ஷன் திட்டமும் தொழிலாளர்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. பல ஆண்டுகளுக்கு பிறகு ஓய்வு பெறும்போது என்ன என்பதை கணக்கிடுவதிலும், பலனளிக்கும் வகையில் எதை தேர்ந்தெடுப்பது என்று புரியாமல் தொழிலாளர்கள் பலர் குழப்பத்தில் உள்ளனர். இந்நிலையில் குறைந்த பட்ச பிஎப் பென்ஷன் திட்டமும் ரத்து செய்யப்படுவது தொழிலாளர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

தொழிலாளர் அமைப்புகள் எதிர்ப்பு


குறைந்தபட்ச பென்ஷன் திட்டத்தை ரத்து செய்வதை தொழிலாளர் அமைப்புகள் சில எதிர்ப்பு தெரிவித்துள்ளன. பிஎப் ஓய்வூதியம் என்பது தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு அளிக்க கூடியது. ஆனால், தொழிலாளர் பணத்தை பங்குச்சந்தையும், தனியார் காப்பீடு நிறுவனங்களிலும் முதலீடு செய்வதில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. குறைந்த பட்ச பென்ஷன் தொகையை குறைப்பதால் பல லட்சம் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். இவ்வாறு செய்வது தனியார் காப்பீடு நிறுவனங்கள் நிர்வகிக்கும் தேசிய ஓய்வூதிய திட்டத்தில் சேர்வதற்கு தூண்டுவதாகவே அமையும் என்று தொழிற்சங்க பிரதிநிதிகள் கூறியுள்ளனர்.Aa

No comments:

Post a Comment