Labels

rp

Blogging Tips 2017

கணினி ஆசிரியர்கள் 20,000 பணியிடங்கள் நிரப்பாவிடில் தலைமை செயலகம் முற்றுகை

 'இருபதாயிரம் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்பாவிட்டால், வரும் மே மாதம் தலைமை செயலகத்தை முற்றுகையிடுவோம்,” என தமிழ்நாடு பி.எட்., கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

இச்சங்கம் சார்பில், திண்டுக்கல் முதன்மை கல்வி அலுவலகம் அருகே, ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில தலைவர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். அவர் பேசியதாவது: 2011ல் சமச்சீர் கல்வியில் கணினி அறிவியல் புத்தகம் 6 முதல் 10ம் வரையுள்ள வகுப்புகளுக்கு வழங்கப்பட்டது.
அந்த புத்தகங்கள் பயன்படுத்தப்படாமல் உள்ளன. மீண்டும் புத்தகங்களை புழக்கத்தில் விட்டு நடைமுறைப்படுத்த வேண்டும். தமிழகம் முழுவதும் வேலையின்றி 20 ஆயிரத்துக்கும் அதிகமான பி.எட்., கணினி அறிவியல் ஆசிரியர்கள் உள்ளனர். அவர்களை, மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களில் அமர்த்த வேண்டும். அரசுப்பள்ளிகளில் 10க்கும் மேற்பட்ட பணிகள் கணினியை சார்ந்தே உள்ளன. கணினி அறிவியல் படித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்., அரசு மேல்நிலைப்பள்ளி கணினி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். வட்டார வளமையங்களில் காலியாக உள்ள கணினி அலுவலர் பணியில் எங்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தும் போது கணினி அறிவியல் பாடத்திட்டத்திற்கான பணியிடங்களை உருவாக்க வேண்டும். இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற தவறினால் வரும் மே மாதம் 20 ஆயிரம் பேருடன் தலைமை செயலகத்தை முற்றுகையிடுவோம், என்றார்.
Read More Add Your Opinion 0 Opinions
ஆதார் எண்ணை வங்கிக் கணக்குடன் இணையுங்கள்: ஓய்வூதியதாரர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்
 Posted by ஆசிரியர் வாய்ஸ் 

மத்திய அரசிடம் இருந்து ஓய்வூதியம் பெறும் முன்னாள் அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களின் இறப்புக்கு பின்னர் குடும்ப ஓய்வூதியம் பெறும் வாரிசுகள் தங்களது ஆதார் எண்ணை வங்கிக் கணக்குடன் இணைக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மத்திய அரசில் பணியாற்றி ஓய்வு பெற்ற 50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் ஓய்வூதியம் பெற்று வருகிறார்கள். இவர்கள் அனைவரும் தங்களது ஆதார் எண்ணை வங்கிக் கணக்குடன் இணைத்து, இது தொடர்பான தகவலை ஓய்வூதியம் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்பு துறை அதிகாரிகளுக்கு தெரியப்படுத்த வேண்டும் என மத்திய அரசு இன்று அறிவுறுத்தியுள்ளது.
மேலும், இதுவரை ஆதார் எண்ணுக்கு பதிவு செய்து கொள்ளாத ஓய்வூதியதாரர்களும், அவர்களின் குடும்ப உறுப்பினர்களும், குடும்ப ஓய்வூதியம் பெறும் நபர்களும் தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ளும்படியும் கூறப்பட்டுள்ளது. ஓய்வூதியதாரர்களுக்கு இடையூறு இல்லாமல் பணம் சென்றடைவதை உறுதிபடுத்தவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக ஓய்வூதியம் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்பு துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வரும் நவம்பர் மாதம் தாங்கள் உயிருடன் இருப்பதற்கான ‘ஜீவன் பிரமான்’ டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிப்பதற்குள் இந்த நடைமுறைகளை பூர்த்தி செய்வது கட்டாயம் ஆக்கப்படும் என தெரிகிறது.

No comments:

Post a Comment