Labels

rp

Blogging Tips 2017

அண்ணா பல்கலை கவுன்சிலிங்கில் பங்கேற்க தகுதி என்ன

அண்ணா பல்கலை கவுன்சிலிங்கில் பங்கேற்க தகுதி என்ன என்பது குறித்து, தமிழ்நாடு இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கை செயலர், ரைமண்ட் உத்தரியராஜ் விளக்கம் அளித்தார்.

சென்னை தி.நகரில் நேற்று நடந்த, 'தினமலர் - உங்களால் முடியும்' நிகழ்ச்சியில், அண்ணா பல்கலை பேராசிரியரும், தமிழ்நாடு இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கை செயலருமான ரைமண்ட் உத்தரியராஜ் பேசியதாவது: இன்ஜினியரிங்கில் அனைத்துப் பாடப்பிரிவு கள் நல்லவை தான். ஒன்பதாம் வகுப்பு முதல், நான்கு ஆண்டுகள் கடினமாகப் படித்து விட்டோம் என்றாலும், இன்ஜி., படிப்பில் சேர்ந்து, மேலும், நான்கு ஆண்டுகளும் மாணவர்கள் நன்றாகப் படிக்க வேண்டும். அடுத்த, நான்காண்டு கால கடின உழைப்பு மிக முக்கியம். படிப்பில் சேர்ந்து விட்டோம் என்று சாதாரணமாக இருக்கக் கூடாது* தமிழக மாணவர்களுக்கு மட்டும் தான் அண்ணா பல்கலையில் ஒற்றைச் சாளர முறை மற்றும் ஜாதி வாரி இட ஒதுக்கீடுப்படி,'சீட்' கிடைக்கும். மற்ற மாநிலத்தவர் ஓ.சி., பட்டியல்படி, மதிப்பெண் தரவரிசைப் படிதான், 'சீட்' பெற முடியும்.


* தமிழகப் பிரிவு சிவில் சர்வீஸ் அதிகாரிகளின் பிள்ளைகளுக்கு இங்கு இடம் உண்டு. மற்ற மாநில அதிகாரிகள் இங்கே ஐந்தாண்டுகள் பணியாற்றினால், அவர்களின் பிள்ளைகள் விண்ணப்பிக்கலாம்.


* தமிழகத்தைச் சேர்ந்தோர், எட்டாவது முதல் பிளஸ் 2 வரை, இங்கே ஏதாவது ஒரு வகுப்பில் படிக்காமல் இருந்தால், உரிய அதிகாரியிடம், 'நேட்டிவிட்டி' என்ற இருப்பிட சான்று வாங்க வேண்டும்.


* கணிதம், இயற்பியல் மற்றும் வேதியியலில், ஓ.சி., பிரிவினருக்கு, 50 சதவீதம்; பிற்படுத்தப்பட்டோர், 45; மிகப் பிற்படுத்தப்பட்டோர், பட்டியலினத்தவர், பழங்குடியினர், 40 சதவீத மதிப்பெண் குறைந்த பட்சம் இருக்க வேண்டும்.


* பிளஸ் 2வின், 'இம்ப்ரூவ்மென்ட்' தேர்வு மதிப்பெண், 2006ம் ஆண்டுக்குப் பின் எடுத்துக் கொள்வதில்லை.


* மரைன் இன்ஜினியரிங் படிப்புக்கு, 60 சதவீத மதிப்பெண்ணுடன், ஆங்கிலத்தில் பிளஸ் 2 வில், 50 சதவீத மதிப்பெண், 25 வயதுக்கு உட்பட்டோர், பார்வைப் பிரச்னையின்மை போன்ற கூடுதல் நிபந்தனைகள் உண்டு. பார்வைப் பிரச்னை இருந்தால், மரைன் இன்ஜினியரிங் விண்ணப்பிக்க வேண்டாம்.


* சுரங்கப் படிப்புக்கு இந்த ஆண்டு முதல், பெண்களையும் சேர்த்துக் கொள்கிறோம்.


* தமிழகத்தைச் சேர்ந்த இட ஒதுக்கீடுப் படி, 'சீட்3 பெற, கண்டிப்பாக அங்கீகாரம் பெற்ற உரிய அதிகாரியிடம், ஜாதிச் சான்றிதழ் பெற வேண்டும்.


* தமிழகத்தைச் சேர்ந்த முதல் தலைமுறைப்பட்டதாரி என்றால், 'நேட்டிவிட்டி' சான்றிதழ் வேண்டாம். முதல் தலைமுறைப் பட்டதாரி சான்றிதழ் கண்டிப்பாக வேண்டும்.


* மாற்றுத்திறனாளிகளுக்கு உடல் ஊனமுற்றோர், பார்வையற்றோர் மற்றும் செவித்திறன் குறைபாடுடையோருக்கு, தலா, 1 சதவீத இடம் உண்டு.


* விளையாட்டுப் பிரிவினருக்கு கடந்த, ஐந்தாண்டுகளின் விளையாட்டு செயல்பாடு கணக்கிடப்படும். இப்பிரிவில், 500 சீட் உண்டு. இதில், 12 அண்ணா பல்கலை கல்லூரிகளில் பிரிவுக்கு ஒன்றும், இணைப்புக் கல்லூரிகளுக்கு ஏதோ ஒரு பாடப்பிரிவில், தலா, ஒரு 'சீட்' என ஒதுக்கப்படும்.


* அண்ணா பல்கலை இணையத்தளத்தில், கடந்த ஆண்டு, 'கட் ஆப்' கல்லூரிப் பட்டியல் வெளியிட்டுள்ளோம். அண்ணா பல்கலை விண்ணப்பத்துடன் இணைந்த, 40 பக்க குறிப்பேட்டை முழுவதுமாகப் படித்து விட்டு, விண்ணப்பம் நிரப்புங்கள்.


* 'கோடிங் ஷீட்' தகவல்களே கவுன்சிலிங்குக்கு எடுத்துக் கொள்ளப்படும். சந்தேகங்களை தீர்க்க, விண்ணப்ப எண்ணை கண்டிப்பாக குறித்து வைத்துக் கொள்ள வேண்டும்.


* விண்ணப்பத்துடன் சான்றிதழ் நகல் மட்டுமே இணைக்க வேண்டும். 'கோடிங் ஷீட்'டை 'பின்' பண்ணக்கூடாது. இவ்வாறு அவர் பேசினார்.

No comments:

Post a Comment