Labels

rp

Blogging Tips 2017

பொள்ளாச்சியில் 2 அரசு துவக்கப் பள்ளிகள் மாணவர்கள் சேர்க்கை இல்லாததால் மூடப்பட்டன.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் 2 அரசு துவக்கப் பள்ளிகள் மாணவர்கள் சேர்க்கை இல்லாததால் மூடப்பட்டன. கோடை விடுமுறை முடிந்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் பொள்ளாச்சிக்கு உட்பட்ட கோவை சாலையில் உள்ள துவக்கப் பள்ளி மற்றும் அழகாபுரி வீதியில் உள்ள துவக்கப் பள்ளியில் சேர மாணவர்கள் முன்வரவில்லை. இதனால் இந்த 2 பள்ளிகளையும் மூட மாவட்ட கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
மாணவர்கள் சேர்க்கப்படாததற்கு பெற்றோரிடம் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தாததே காரணம் என சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவிக்கின்றனர். மேலும் தனியார் பள்ளிகளில் கட்டணக் கொள்ளை நடந்து வரும் வேளையில் அரசு பள்ளிகளை மூடுவது தனியாருக்கு துணை போவதாக சந்தேகத்தை எழுப்புவதாகவும் அவர்கள் கூறுகின்றனர். எனவே உரிய விழிப்புணர்வு மூலம் மாணவர்களை சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

No comments:

Post a comment