Labels

rp

Blogging Tips 2017

பள்ளிகள் கட்டாயம் திறந்திருக்க வேண்டும்:மகா., அரசு உத்தரவு

மகாராஷ்டிரா :இம்மாதம், 21ம் தேதி, சர்வதேச யோகா தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. அன்று, ஞாயிறு என்பதால் பள்ளிகளுக்கு விடுமுறை. ஆனால், 'யோகா வகுப்புக்காக அன்று, பள்ளிகள் கட்டாயம் திறந்திருக்க வேண்டும்' என, மகாராஷ்டிரா மாநில பா.ஜ., - சிவசேனா கூட்டணி அரசு உத்தரவிட்டுள்ளது.
இதற்கு, அங்குள்ள முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. 'ஜமாத் - இ - இஸ்லாமி ஹிந்த்' என்ற அமைப்பின் கல்வி துறை செயலர் முகமது ஜகூர் கூறுகையில், ''பள்ளிகளில் கட்டாய யோகா வகுப்பு நடத்துவதும், சூரிய நமஸ்காரம் செய்யச் சொல்வதும், எங்கள் மத சுதந்திரத்துக்கு எதிரான நடவடிக்கை. இதுகுறித்து, முதல்வர் தேவேந்திர பட்நாவிசை சந்தித்து முறையிடவுள்ளோம்,'' என்றார்.

No comments:

Post a Comment