Labels

rp

Blogging Tips 2017

Top news கதி! கட்டாந்தரையே மாணவர்களுக்கு கதி! 'பெஞ்ச், டெஸ்க்' இல்லாத பள்ளி ஆய்வகங்கள்

தமிழக அரசு மேல்நிலைப் பள்ளி ஆய்வகங்களில், 'பெஞ்ச்', 'டெஸ்க்' மற்றும் செய்முறை உபகரணங்கள் இல்லாமல், மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பல பள்ளிகளில், மாணவர்கள் கட்டாந்தரையிலேயே அமரும் சூழல் ஏற்பட்டு உள்ளது.

3,500 பள்ளிகள்:
தமிழகத்தில், 6,300 மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன.
இதில், 3,500 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள்; மற்றவை மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள்.பெரும்பாலான அரசு பள்ளிகளில், வகுப்பறை மற்றும் ஆய்வக வசதிகள் இல்லை. இயற்பியல் ஆய்வகங்களில், சாதாரண பெண்டுலம், அளவுகோல்கள், பேட்டரி மற்றும் மின் திறன் அளவீட்டுக் கருவிகள் கூட இல்லை என, மாணவர்கள் புகார் கூறுகின்றனர்.வேதியியல் ஆய்வுக் கூடங்களில் பிப்பெட், பியூரெட், வேதியியல் அமில வகைகள், சோதனைக்கான மின் கொதிப்பான்களும் இல்லை.


விலங்கியல் ஆய்வகத்தில், முன்னர் போல் உயிரினங்களை வெட்டி, அதன் உறுப்புகளைக் காட்ட தடை விதிக்கப்பட்டுள்ளதால், அதற்கு பதில் செயற்கை உயிரின உருவங்கள் மற்றும் பாகங்கள் வைத்திருக்க வேண்டும். தாவரவியல் ஆய்வகங்களில் பூக்கள், இலைகளை நேரில் எடுத்து வந்து, அதன் பாகங்களைக் காண்பிக்கவேண்டும். இந்த பாகங்கள் அடங்கிய வரைபடங்களும், சிறிய, 'மினியேச்சர்'களும் வைத்திருக்க வேண்டும். ஆனால், இது எதுவும் நடப்பதில்லை.

அனைத்து ஆய்வகங்களிலும், 'மைக்ரோஸ்கோப்' நுண்கருவி இருக்க வேண்டும்; அதுவும் பல பள்ளிகளில் இல்லை. இருக்கும் இடங்களிலும் பயன்படுத்த முடியாமல், கண்காட்சி பொருளாக, மாண வர்களின் கண்ணில் மட்டும் காட்டுகின்றனர்.பல ஆய்வகங்களில், செய்முறைக்கான மேடை, பெஞ்ச், டெஸ்க் போன்றவை இல்லாததால், மாணவர்கள் பெயரளவில் ஆய்வகங்களுக்கு வந்து, கட்டாந்தரையில் அமரும் நிலை உள்ளது.

நன்கொடை:
இதுகுறித்து, மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் சிலர்கூறியதாவது:பெஞ்ச், டெஸ்க் போன்றவற்றை, கல்வித்துறையில் வேறு அலுவலகங்களுக்கோ அல்லது அரசுத்துறை அலுவலகங்களுக்கோ எடுத்து சென்று விடுகின்றனர். பின், யாரிடமாவது நன்கொடை கேட்கச் சொல்கின்றனர். நாங்கள் நன்கொடையாளர்களைத் தேடி வருகிறோம். உபகரணங்களைப் பொருத்தவரை, டெண்டர் போட்டு கல்வித்துறையில் வாங்குவதோடு சரி; பள்ளிகளுக்கு சப்ளை செய்வதில்லை.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment