rp

Blogging Tips 2017

பி.ஆர்க்.: 1,726 பேருக்கு சேர்க்கைக் கடிதம்

பி.ஆர்க். கட்டடவியல் பொறியியல் படிப்பில் மொத்தம் 1,726 பேர் சேர்க்கைக் கடிதம் பெற்றுள்ளனர்.
 பொறியியல் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் கடந்த ஜூன் 28-ஆம் தேதி முதல் நடத்தி வருகிறது.
 இதற்கிடையே மொத்தம் 2,042 இடங்களைக் கொண்ட பி.ஆர்க். படிப்பு சேர்க்கைக்கான கலந்தாய்வை ஞாயிற்றுக்கிழமை பல்கலைக்கழகம் நடத்தியது.

 ஒரே நாளில் நடத்தப்படும் இந்தக் கலந்தாய்வில் பங்கேற்க 2,690 மாணவ, மாணவிகள் அழைக்கப்பட்டனர். இவர்களில் 1,726 பேர் இடங்களைத் தேர்வு செய்து கல்லூரி சேர்க்கைக் கடிதங்களைப் பெற்றுச் சென்றனர்.
 கடந்த ஜூலை 1-ஆம் தேதி தொடங்கிய பொதுப் பிரிவு மாணவர் பி.இ. சேர்க்கை, அரசு விடுமுறை காரணமாக ஜூலை 18,19 ஆகிய இரு நாள்கள் நடத்தப்படவில்லை. மீண்டும் ஜூலை 20-ஆம் தேதி தொடங்கி 28-ஆம் தேதி வரை கலந்தாய்வு தொடங்கி நடைபெற உள்ளது.
 அதன் பிறகு தொழில் பிரிவு மாணவர்களுக்கு ஜூலை 29,30 ஆகிய தேதிகளில் கலந்தாய்வு நடைபெறும்.

No comments:

Post a Comment