Labels

rp

Blogging Tips 2017

தினமும் காலை, மாலை மற்றும் சனிக்கிழமை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்த சி.இ.ஒ. அறிவுரை

கிருஷ்ணகிரி, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், சி.இ.ஒ., திடீர் ஆய்வு செய்தார்.கிருஷ்ணகிரி, அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு நேற்று காலை சென்ற மாவட்ட சி.இ.ஒ., தமிழரசன், எஸ்.எஸ்.எல்.ஸி., மற்றும் ப்ளஸ் 2 மாணவிகளுக்கான சிறப்பு வகுப்புகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பள்ளியில் தினமும் காலை, மாலை மற்றும் சனிக்கிழமை நாட்களில் ஆசிரியர்கள் ஆர்வத்துடன் மாணவிகளுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தி, தேர்ச்சி விழுக்காட்டை அதிகரிக்க வேண்டும் என அறிவுரை வழங்கினார்.
தொடர்ந்து பள்ளி வளாகத்தை ஆய்வு செய்தார். பள்ளி தலைமை ஆசிரியர் ரமேஷ்குமார், உதவி தலைமை ஆசியர்கள், பழனிசாமி, லியோன், நஞ்சகுமார், ஜெஸிந்தா உள்பட பலர் உடன் இருந்தனர்.

No comments:

Post a Comment