Labels

rp

Blogging Tips 2017

பகுதி நேர ஆசிரியர்கள் பணிநிரவல்-தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி கண்டணம்-கைவிடக்கோரிக்கை

அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் அரசு பள்ளிகளில் 6 முதல் 8 ம் வகுப்புகளில் ஓவியம், தையல், இசை, உடற்கல்வி, வாழ்வியல்திறன், கம்ப்யூட்டர் பிரிவுகளில் 16,549 பகுதிநேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். 

           அவர்களுக்கு தொகுப்பூதியமாக மாதம் ரூ.7 ஆயிரம் வழங்கப்படுகிறது. தற்போது 6 முதல் 8 ம் வகுப்பு வரை 100 க்கும் குறைவான மாணவர்கள் உள்ள பள்ளிகளை கணக்கிட வேண்டும்.

அப்பள்ளிகளில் பணிபுரியும் உபரி பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரவல் செய்ய வேண்டுமென, அனைவருக்கும் கல்வி இயக்க திட்ட இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.

  • நுாறுக்கும் குறைவான மாணவர்கள் உள்ள பள்ளிகளில் பணிபுரியும் பகுதிநேர ஆசிரியர்கள் பணிநிரவல் செய்யப்படுவதை தமிழ் நாடு ஆசிரியர் கூட்டணி வன்மையாக கண்டிக்கிறது
  • மாணவர் எண்ணிக்கையை கணக்கில் கொள்ளாமல் வகுப்புக்கு ஓர் பட்டதாரி ஆசிரியர் என 3 பட்டதாரி ஆசிரியர்களை கொண்டதாக நடுநிலைப்பள்ளிகள் இயங்கி வருவது அறிந்ததே
  • எனவே மாணவர்கள் கணக்கில்கொள்ளாமலே பகுதி நேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.
  •  தன்வாழ்விடத்திற்கு அருகிலேயே நியமனம் பெற்றதால் பலர்  குறைவான  ஊதியமாயினும் பர்வாயில்லை என இந்த பதவியினை பொறுப்பேற்றனர்.
  • ஆனால் இப்போது மாணவர் எண்ணிக்கையைகணக்கில் கொண்டு பணிநிரவல் செய்வதால் தொலைதூரத்தில் வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது
  • துாரம் அதிகமுள்ள பள்ளிகளுக்கு இடமாற்றம் செய்துவிடுவார்களோ என்று பகுதிநேர ஆசிரியர்கள் கலக்கம் நியாமானது.
  • குறைவான சம்பளத்தில்துாரம் அதிகமுள்ள பள்ளிகளுக்கு இடமாற்றம் செய்தால் பலர் வேலை இழக்க நேரிடலாம்.
  • மேலும் ஓவியம், தையல், இசை, உடற்கல்வி, வாழ்வியல்திறன், கம்ப்யூட்டர் பிரிவு ஆகிய பாடப்பிரிவுகளில் மாணவர்களின் எண்ணிக்கையில் அளிக்கப்பட்டால் கல்வியின் தரம் குறைவதுடன்,கற்பித்தலின் நோக்கம் நிறவேற வழியில்லாமல் போகும்,
  • மேலும்மாணவர் குறைவான எண்ணிக்கையுடைய பல கிராமப்புற நடுநிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு,ஓவியம், தையல், இசை, உடற்கல்வி, வாழ்வியல்திறன், கம்ப்யூட்டர் பிரிவு ஆகிய பாடப்பிரிவுகளில் கிடைக்கும் திறன் கிட்டாமல் போகும்
  • இது  அரசுப்பள்ளி மாணவ்ர்களிடையே எண்ணிக்கையின் அடிப்படையில்  ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தி அனைவருக்கும் சமமான தரமான கல்வி  என்ற நிலையை  கிட்டம்மல் செய்ய வழி வகுக்கும்
  • இந்நிலை பணியிடக்குறைப்பானது பிற்காலத்தில் மாணவர் எண்ணிக்கையை அடிப்படையாகக்கொண்டு பாட ஆசிரியர்களையும் பணிநிரவல் என்ர பெயரில் குறைக்க ஏதுவாக அமைந்துவிடும்.
எனவே தமிழக அரசு மாணவர் எண்ணிக்கையின் அடிப்படையில் பகுதிநேர ஆசிரியர்கள் பணிநிரவல் செய்யப்படுவதை தமிழ் நாடு ஆசிரியர் கூட்டணி வன்மையாக கண்டிக்கிறது என்றும் அதனை கைவிட வேண்டும் எனவும் தமிழக அரசைக்கேட்டுக்கொள்கிறது.என அதன் பொதுசெயலர் (பொறுப்பு) திரு.க.செல்வராஜ் அவர்கள் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார் <www.tntf.in>

No comments:

Post a Comment