Labels

rp

Blogging Tips 2017

தேர்வு சமயங்களில் ஆசிரியர்களுக்கு பயிற்சிகள்

ஆசிரியர்கள் இல்லா பள்ளிகளும், காலாண்டுத்தேர்வுகளுக்கு தயாராகாத மாணவர்களும்
1. அனைவருக்கும் கல்வி இயக்கம் மற்றும் மத்திய இடைநிலைக்கல்வித்திட்டத்தின் கீழ் ஆசிரியர்களுக்கு இந்த மாதத்தில் வழங்கப்படும் பயிற்சிகளினால் தமிழ்நாட்டில் கற்றல் மற்றும் கற்பித்தல் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், காலாண்டுத்தேர்வு சமயத்தில் இவ்வாறு
பயிற்சிகள் நடைபெறுவதால் ஆசிரியர்கள் பாடப்பகுதியினை மாணவர்களுக்கு முடிப்பதிலும், அதற்கான பயிற்சிகள் கொடுப்பதிலும் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாக பெற்றோர்கள் புகார் தெரிவித்து வருகிறன்றனர்.


2. இந்த செப்டம்பர் மாதம் மட்டும் கணித உபகரணப்பெட்டி பயிற்சி தொடக்கநிலை ஆசிரியர்களுக்கும் (1-5 வகுப்பு) (9,10,11) மற்றும் (14,15,16)(18,21,22),(6 முதல் 8 வகுப்பு) ஆங்கில பேச்சுப்பயிற்சி உயர்தொடக்கநிலை(14 மற்றும் 21), எளிய அறிவியல் சோதனைகள் உயர் தொடக்க நிலை(14,15,16) RMSA மூலம் 9 மற்றும் 10ஆம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு அனைத்து பாடங்களுக்கும் பயிற்சிகள் என்று பள்ளியில் இருக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் பயிற்சிகள் கொடுக்கப்பட்டால் ஒரு ஆசிரியரை வைத்துக்கொண்டு தொடக்க நிலைப்பள்ளிகளும், 2 ஆசிரியர்களை வைத்துக்கொண்டு நடுநிலைப்பள்ளிகளும், ஆசிரியர்களே இல்லாமல் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் இயங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாக தலைமையாசிரியர்கள் விழி பிதுங்கி நிற்கின்றனர்.

3. ஆசிரியர்கள் இல்லாமல் பள்ளி அறைகளில் மாணவர்கள் விளையாடுவதும், இவர்களை கண்டிக்கும் உரிமைகள் தற்போது ஆசிரியர்களுக்கு இல்லாத காரணத்தாலும், மேற்கண்ட பயிற்சிகளினால் கல்வி சூழல் பாதிக்கப்பட்டுள்ளது.

4. ஆசிரியர்கள் பயிற்சிகளுக்கு சென்றுவிடுவதால் பள்ளியில் ஆசிரியர்களே இல்லை என்ற காரணத்தால்தான் அரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்ப்பதில்லை என்ற உண்மையை எப்பொழுது அரசு உணரப்போகிறதோ என்று அரசுக்கு ஆதரவாக செயல்படும் சங்க நிர்வாகிகளும் புலம்ப ஆரம்பித்துவிட்டனர்.

5. மேலும் தற்போது கொடுக்கப்படும் பயிற்சிகள் ஆசிரியர்களுக்கு பாட அறிவை வளர்ப்பது இல்லை என்றும், வெறுமனே ஒதுக்கப்பட்ட தொகையை செலவு செய்யவும், அதற்காக மலிவான புத்தகத்தை தயாரித்து கையேடுகளைாக கொடுக்கின்றனர் என்றும் தற்போதைய facebook,whatsapp கலாச்சாரத்தில் மேற்கண்ட பயிற்சிகளை் வீண் என்றும் ஆசிரியர்களே ஒரு பட்டனை கூகுளில் சொடுக்கினால் தெரிந்துகொள்ளலாம் என்றும் கருத்து நிலவுகிறது.
இவ்வாறான பயிற்சிகளால் ஆசிரியர் பயிற்றுநர்களின் மனித ஆற்றல் வீணடிக்கப்படுவதாகவும், ஆசிரியர்களுக்கு தெரிந்த விஷயங்களையே வருடா வருடம் பயிற்சிகளாக கொடுக்கப்பட வேண்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது

6. பயிற்சிகள் பாடப்புத்தகத்தை சார்ந்து இருக்கவேண்டும் என்றும் அதில் மாணவர்களுக்கு எப்படி சிறந்த முறையில் பாடம் புகட்டலாம் என்று இருக்க வேண்டும் அதற்கு ஆசிரியர் பயிற்றுநர்களை பயன்படுத்தினால் சிறப்பாக இருக்கும் என்று கல்வியாளர்கள் கருதுகின்றனர்.

7. தடுமாற்றங்கள் ஆரம்ப கட்டத்திலே இருக்கும்போது அடுத்த மாதம் மாநில அடைவுத்திறன் தேர்வு(SLAS) வைப்பதற்கு தயாராகிறது கல்வித்துறை. தமிழகத்தில் மாணவர்களின் கல்வி வளர்ச்சி மற்றும் அடைவுத்திறன் அடையவேண்டும் என்ற காரணத்தால் தமிழ முதல்வர் அவர்கள் எடுத்து வரும் பல்வேறு தொலைநோக்கு தி்ட்டங்கள் அரசு அதிகாரிகளின் திட்டமிடப்படாத செயல்பாடுகளினால் அனைவருக்கும் கல்வி இயக்கம் ஒரு பாதையிலும், மற்றொன்று மற்ற பாதையிலும், இதற்காக அமைக்கப்பட்ட இயக்குநர்கள் தன் சொந்த பாதையிலும் இருப்பதால் முதலமைச்சர் அவர்களின் கல்வி சார்ந்த திட்டங்களுக்கு இடர்பாடு ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு பள்ளிகளை பெற்றோர்கள் வெறுப்பதற்கு கல்வி அதிகாரிகளின் சரியான திட்டமிடல் இல்லாத காரணமே.


தமிழக முதலமைச்சரின் கவனத்திற்கு ஆசிரியர் சங்கங்கள் ”அதிகாரிகளை நம்பாமல்” நேரடியாக கொண்டு சென்றால் மட்டுமே இதற்கு விடிவு காலம் பிறக்கும்

No comments:

Post a Comment