Labels

rp

Blogging Tips 2017

செயல்வழி கற்றலில் மாணவர்கள் வருகை சரிவு

வேலூர்: மனிதன் தனது வாழ்க்கை முழுவதும் செய்ய வேண்டிய ஒன்று என்றால் அது கல்வி கற்பது ஒன்றுதான். இளமை முதல் இறக்கும் வரை இடைவிடாது கற்றாலும் ஒருவனால் கல்வியில் முழுமை அடைய முடியாது. எனவே தான் ‘கற்றது கை மண் அளவு; கல்லாதது உலகளவு’ என்னும் தொடர் மக்களிடையே நிலவுகிறது. கல்வியை ஒருவன் கற்கத் தொடங்கும் போது சிறிது துன்பமாகத் தான் இருக்கும். ஆனால் கற்கத் தொடங்கி விட்டால் அதுவே இன்பமாக மாறும் என்று குமரகுருபரர் பாடியுள்ளார். தொடங்குங்கால் துன்பமாய்
இன்பம் பயக்கும் மடம் கொன்று அறிவு அகற்றும் கல்வி ஒருவரின் வாழ்க்கை துணையாய் வருவது சொந்தங்கள் அல்ல கல்வி மட்டுமே.
வாழ்க்கையில் செல்வம் இருந்தால் அவை அழிந்துவிடும். வாழ்க்கை முழுவதும் அழியாத செல்வம் கல்வி. இந்தகல்வி அறிவுக்கு அடிப்படையான தொடக்கக்கல்வியில் முறையான பாடத்திட்டங்களை அரசு அறிவிக்காததால் மாணவர்களும், ஆசிரியர்களும் அல்லோல கல்லோலபட்டு வருகின்றனர். தமிழகம் முழுவதும் கடந்த 2006ம் ஆண்டு 1ம் வகுப்பு முதல் 4ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகள் எளிமையான முறையில் பாடங்களை படிக்கவும், ஒவ்வொரு மாணவர்களின் ஆற்றல் மற்றும் திறனைகொண்டு முன்னேறும் வகையிலும் செயல் வழிக்கற்றல் என்ற பாடத்திட்டம் கொண்டு வரப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் மாணவர்களுக்கு பாடச்சுமையும், புத்தகச்சுமையும் குறைப்பதற்காக வண்ணகற்றல் அட்டைகள் அச்சிடப்பட்டு, அந்தந்த பள்ளிகளுக்கு வழங்கப்படுகிறது. மேலும் மாணவர்களுக்கு சமமாக ஆசிரியர்களும் தரையில் அமர்ந்து, பாடங்களை கற்பித்து வருகின்றனர். கற்றல் அட்டைகள், பாய்கள், ஒவ்வொரு மாணவ, மாணவிகளுக்கும் தனித்தனி கரும்பலகைகள், கற்றல் கருவிகள் மற்றும் உபகரணங்கள் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கான நிதியும் அரசு வழங்குகிறது. கற்றல் அட்டைகளை மாணவர்கள் தினமும் எடுத்து படிப்பதால் கிழிந்துவிடுகிறது. இதனால் மாணவர்களுக்கு போதிய கற்றல் அட்டைகள் வழங்குவதில்லை. இதனால் பெரும்பாலான மாணவ, மாணவிகள் படிக்காமல் போகின்றனர். மேலும் செயல்வழிக் கற்றல் பாடத்திட்டத்திற்கு தேவையான உபகரணங்களும் இல்லை. இதனால் பெற்றோர் தங்களது குழந்தைகளை படிப்பதற்கு அனுப்புவதில்லை. வேலூர் மாவட்டத்தில் 103 அரசு ஆரம்பபள்ளிகளில் எஸ்எஸ்ஏ திட்டம் அமலில் உள்ளது. இப்பள்ளிகளில் 302 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
அதேபோல் திருவண்ணாமலை மாவட்டத்தில் 106 அரசு ஆரம்பபள்ளிகளில் 196 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். கடந்த ஆண்டைவிட இந்தஆண்டு 50 சதவீதம் மாணவர்கள் குறைந்துள்ளனர் என்று கூறப்படுகிறது. பெரும்பாலான மாவட்டங்களில் அரசு ஆரம்பபள்ளிகளில் மாணவ, மாணவிகளின் வருகை குறைந்துள்ளது தமிழகம் முழுவதும் எஸ்எஸ்ஏ திட்டம் மூடுவிழாவுக்காக காத்திருக்கிறது. அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு தொடக்க கல்வித்துறையின் சார்பில் ஒவ்வொரு வாரமும் ஏதாவது ஒரு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. முக்கியமாக மாணவர்களின் திறனை வளர்ப்பது, எளிய முறையில் எப்படி கல்வி கற்பிப்பது, புதிய செயல் திட்டங்களை எப்படி நடைமுறைப்படுத்துவது, மொழிப்பாடங்களை எப்படி கையாள்வது என பல்வேறு வழிமுறைகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து மேற்கண்ட ஆசிரியர்களுக்கு தொடர்ந்து பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சிகள் எல்லாம் அனைவருக்கும் கல்வி இயக்கம் நடத்தி வருகிறது. மாணவர்களின் திறனை மேம்படுத்துவதற்காக நடத்தப்படும் இந்த பயிற்சிகளால் மாணவர்களுக்கு வேறுவகையில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது என்று ஆசிரியர்களே புலம்புகின்றனர்.
தொடர்ந்து பயிற்சி, பயிற்சி என்று அலைக்கழிப்பதால் ஆசிரியர்களால் பள்ளிக்கு பலநாட்கள் செல்ல முடியாதநிலை ஏற்படுகிறது. குறிப்பாக ஓராசிரியர் பள்ளிகள், ஈராசிரியர் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் பயிற்சி வகுப்புகளுக்கு செல்லும் நாட்களில் பள்ளியை பார்த்துக் கொள்ளவும், பாடம் நடத்தவும் ஆசிரியர்கள் இல்லாமல் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு ஆசிரியர் கட்டாயமாக பயிற்சிக்கு செல்ல வேண்டும் என்ற உத்தரவால் வகுப்பில் பாடம் நடத்துவது பாதிக்கப்படுகிறது. ஆரம்பப்பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளை பொறுத்த வரை 3 ஆசிரியர்கள் கட்டாயமாக பயிற்சிக்கு செல்லவேண்டும் என்ற நிலை உள்ளது. அதனால் மற்ற ஆசிரியர்கள் அனைத்து வகுப்புகளையும் பார்த்துக்கொள்ள வேண்டிய நிலை ஏற்படுகிறது. அதனால் அந்த குறிப்பிட்ட பாட வகுப்புகளை யாரும் நடத்த முடியாதநிலை ஏற்பட்டு மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். கல்விஆண்டு முடியும் காலத்தில் அவசரம் அவசரமாக விடுபட்ட பாடங்களை நடத்தி முடிக்க வேண்டிய நிலைக்கு ஆசிரியர்கள் தள்ளப்படுகின்றனர். அதனால் மாணவர்களும் பாடங்களை படிக்க முடியாமல் பாதிக்கப்படுகின்றனர். இதுதான் அரசுப் பள்ளிகளின் நிலையாக இருக்கிறது.
இதுபோன்ற பிரச்னைகளை சந்திக்கும் அரசுப்பள்ளி மாணவர்கள் அடிப்படைக்கல்வியை முழுமையாக பெற முடியாமல் போகிறது. உயர்கல்விக்கு செல்லும் போது, அதை தொடர்வதில் மாணவர்கள் திணறுகின்றனர். பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளில் சேரும் போது மாணவர்கள் சிரமப்படுவதாக ஆசிரியர்களே கூறுகின்றனர். கல்வித்துறை இவற்றை கவனத்தில் கொண்டு ஆசிரியர்களை பாடம் நடத்துவதற்கு வசதியாக வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.
காலியான எஸ்எஸ்ஏ கூடுதல் சிஇஓ பதவி
அனைவருக்கும் கல்வி இயக்கதிட்டத்தில் தமிழகத்தில் மாவட்ட வாரியாக கூடுதல் முதன்மைக்கல்வி அலுவலர்கள் நியமிக்கப்பட்டனர். கடந்த 2012ம் ஆண்டு இத்திட்டம் நிறைவடைந்த நிலையில், 2018 வரை நீடிக்கப்பட்டது. நிதி நெருக்கடியால் இத்திட்டத்தில் ஆசிரியர்களுக்கான கற்பித்தல் பயிற்சி உட்பட பல்வேறு செயல்பாடுகள் குறைந்தன. ஒன்றியம் வாரியாக மேற்பார்வையாளர் பணியிடங்கள் நீக்கப்பட்டன. இப்பணியை மூத்த ஆசிரியர் பயிற்றுனர்கள் கூடுதலாக கவனிக்கின்றனர். இந்நிலையில் கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் பதவியையும் ரத்து செய்ய கல்வித்துறை பரிசீலித்து வருகிறது. இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது: நிதி குறைப்பால் கூடுதல் முதன்மை கல்வி அலுவலரின் பதவி காலியாக உள்ளது. எனவே இதற்கான பொறுப்பு முதன்மைக்கல்வி அலுவலரிடம் ஒப்படைக்கும் போது பணிச்சுமை, நிர்வாக குளறுபடி அதிகரிக்கும். பதவி உயர்வுக்கு காத்திருக்கும் தலைமை ஆசிரியர், மாவட்டக்கல்வி அலுவலர்கள் பாதிக்கப்படுவர். வரும் 2018ம் ஆண்டுவரை இப்பதவியை நீட்டிக்கலாம் என்று பள்ளிக்கல்வித்துறை ஆலோசித்து வருகிறது’ என்றனர்.
பழுதடைந்து கிடக்கும் கல்வி உபகரணங்கள்
வட்டார மையங்களில் பயிற்சி, மீளாய்வுக் கூட்டங்கள் நடத்துவது, சுற்றறிக்கைகள் அனுப்புவது, உட்பட கல்வி மற்றும் நிர்வாகப் பணிகள் நடக்கின்றன. இம்மையங்களுக்கு ஜெனரேட்டர், நகல் மெஷின்கள், கணினி, வீடியோ கான்பரன்சிங் உபகரணம் உட்பட பல்வேறு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் பல மையங்களில் இந்த உபகரணங்கள் பழுது காரணமாக, மாதக் கணக்கில் பராமரிப்பின்றி முடங்கிக் கிடக்கின்றன. இவற்றை அதிகாரிகளும் கண்டுகொள்வதில்லை

No comments:

Post a Comment