Labels

rp

Blogging Tips 2017

நேர்மையற்ற அதிகாரிகளுக்கு முன்கூட்டியே ஒய்வு: மத்திய அரசு திட்டம்

நேர்மையற்ற, திறமையற்ற அதிகாரிகளுக்கு முன்கூட்டியே ஓய்வு வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
 மத்திய அரசு அலுவலகங்களின் செயல்பாடுகளை மேம்படுத்தும் நோக்கில் மத்திய அமைச்சரவைச் செயலர் பி.கே.சின்ஹா தலைமையிலான கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
 அப்போது, மத்திய அரசு அலுவலகங்களின் நேர்மையையும், திறனையும் உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வது குறித்து விவாதிக்கப்பட்டது.

 இந்தக் கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தக் கூட்டத்துக்குப் பின்னர் மத்திய பணியாளர் நலத் துறை அமைச்சகம் சார்பில் மற்ற மத்திய அரசு அலுவலகங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
 அதில், மத்திய அரசின் சட்டப்பிரிவு 56(ஜே)-இன் கீழ், நேர்மையற்ற அல்லது திறமையற்ற அதிகாரிகளை அடையாளம் கண்டு அவர்களுக்கு முன்கூட்டியே ஓய்வு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment