Labels

rp

Blogging Tips 2017

பள்ளிகள் மூலம் ஜாதிச்சான்றிதழ்; 20 மையங்களில் வழங்க ஏற்பாடு

பள்ளியில் படிக்கும் 6ம் வகுப்பு, எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு ஜாதிச்சான்று பெறுவது அவசியமாகும். முன்பு, தாலுகா அலுவலகங்களில் விண்ணப்பித்து, பெற்றனர். கடந்தாண்டு முதல், அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம், ஆவணங்கள் பெறப்பட்டு, தாலுகா அலுவலகத்தில் மொத்தமாக விண்ணப்பத்து, பள்ளி வழியாக ஜாதி சான்றிதழ் வழங்கப்பட்டது. அடுத்த கட்டமாக, குறிப்பிட்ட பள்ளிகளில் உள்ள தலைமை ஆசிரியர் மற்றும் கணினி ஆசிரியர்களுக்கு, ஆன்லைனில் பதிவு செய்வது குறித்து பயிற்சி வழங்கப்பட்டது. அப்பள்ளிக்கு அருகே உள்ள பிற பள்ளிகள், குறிப்பிட்ட பள்ளியுடன் இணைக்கப்பட்டு, அப்பள்ளியில் ஆன்லைனில் பதிவு செய்து, தாலுகா அலுவலகம் மூலம் சான்றிதழ் பெற்று வழங்கினர்.


இவ்வாறு, 54 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு, பிற பள்ளிகள் அத்துடன் இணைத்து செயல்படுத்தனர். இதில், பல்வேறு நடைமுறை சிக்கல் வந்ததால், இம்முயற்சி கைவிடப்பட்டது. தற்போது, அரசு மற்றும் தனியார் பள்ளிகள் என மாவட்ட அளவில், 20 மையங்களாக, குறிப்பிட்ட பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இப்பள்ளியில் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான, சாப்ட்வேர் வழங்கப்பட்டுள்ளது. இப்பள்ளிக்கு அருகில் உள்ள பிற பள்ளிகள், தங்கள் பள்ளி மாணவ, மாணவியரின் ஜாதி சான்றிதழுக்கான ஆவணங்களை பெற்று, இப்பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் கணினி ஆசிரியர் மூலமோ அல்லது, தங்கள் பள்ளி தலைமை ஆசிரியர் அல்லது கணினி ஆசிரியர் மூலமோ பதவியேற்றம் செய்யலாம்.

குறிப்பிட்ட பாஸ்வேர்டு மூலம், வருவாய் துறைக்கு, இந்த ஆவணங்கள் அனுப்பி, விசாரிக்கப்பட்டு, ஆன்லைனில் சான்று வெளியிடப்படும். அந்தந்த பள்ளிகள், அச்சான்றுகளை டவுன்லோடு செய்து, பிரிண்ட் எடுத்து மாணவ, மாணவியருக்கு வழங்க வேண்டும். இந்த நடைமுறை, படிப்படியாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனால், மிகக்குறைந்த நாளில், அனைத்து மாணவ, மாணவியருக்கும் ஜாதிச்சான்றிதழ் கிடைக்கப்பெறுவர்.

No comments:

Post a Comment