rp

Blogging Tips 2017

மதுரையில் இந்தியாவின் முதல் என்சிசி அகாடமி: 700 மாணவர்கள் பயிற்சி பெற வசதி

இந்தியாவின் முதல் என்.சி.சி. அகாடமி மற்றும் நிரந்தர முகாம் மையம் மதுரை இடையப்பட்டி யில் கட்டப்பட்டு வருகிறது. இதன் கட்டுமானம் முடிவுறும் நிலையில் இருப்பதாகவும் மார்ச் மாதத்தில் திறக்கப்படலாம் என்று சென்னை மண்டல குழுத் தலைவர் தீபக் நேர்கர் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லியில் அக்டோபர் 6-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை நடைபெற்ற என்.சி.சி. தேசிய விளையாட்டுப் போட்டியில் தமிழ்நாடு- புதுச்சேரி- அந்தமான் மண்டலத்தை சேர்ந்த 3 பேர் பதக்கங்களை பெற்றுள்ளனர். அவர்களுக்கான பாராட்டு விழா சென்னை மருத்துவக் கல்லூரி யில் நேற்று நடைபெற்றது.


இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மாணவர்களுக்கு பரிசளித்த தீபக் நேர்கர் கூறியதாவது:

ஒவ்வொரு முறை பயிற்சி நடத்தவும் கல்லூரி, பள்ளி வளாகங்களில் அனுமதி கேட்க வேண்டியுள்ளது. பல நேரங் களில் அனுமதி கிடைப்பதில்லை. எனவே தமிழ்நாடு- புதுச்சேரி-அந்தமான் மண்டலத்துக்காக புதி தாக என்.சி.சி. பயிற்சி அகாடமியும் நிரந்தர முகாம் மையமும் மதுரை இடையப்பட்டியில் கட்டப்பட்டு வருகிறது.

வரும் பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் பயிற்சி மையம் திறக்கப்படும். இந்தியாவிலேயே என்.சி.சி.க்கான பிரத்யேக பயிற்சி மையம் தமிழ்நாட்டில்தான் முதன் முதலில் கட்டப்படுகிறது. இங்கு சுமார் 700 மாணவர்கள் அனைத்து விதமான பயிற்சிகளையும் பெறலாம். மேலும் காஞ்சிபுரம் அருகில் 4 ஏக்கர் பரப்பளவில் மற்றொரு நிரந்தர முகாம் மையம் அமைக்க மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

என்.சி.சி.யில் பெண்களின் பங்களிப்பை அதிகரிப்பதற்காக தாம்பரத்தில் புதிதாக பெண்கள் பிரிவை தொடங்கவுள்ளோம். கிராமப்புற பெண்கள் மீது அதிக கவனம் செலுத்தவுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment