Labels

rp

Blogging Tips 2017

சரஸ்வதி பூஜை செய்ய நல்ல நேரம் எது?

சரஸ்வதி பூஜை (புதன்கிழமை) இன்று கொண்டாடப்படுகிறது. இன்றைய தினம் சரவஸ்வதி பூஜை நடத்த உகந்த நேரம் காலை 9 மணி முதல் 10 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை, மற்றும் மாலை 6 மணி முதல் இரவு 7.30 மணி வரை ஆகும். இந்த நேரத்தில் நமது பொருட்களை ‘கலைமகள்’ முன்னிலையில் வைத்து வழிபட்டால், எல்லா நலன்களும், வளங்களும் வந்து சேரும்.
நமது இல்லத்து பூஜை அறையில் சரஸ்வதிதேவியின் உருவ பொம்மை அல்லது சரஸ்வதிதேவியின் படம் வைத்து வழிபட வேண்டும். சரஸ்வதிதேவியின் அருகில் விநாயகப் பெருமான் மற்றும் லட்சுமிதேவியின் படங்களை வைத்து வழிபடுவது மேலும் சிறப்பு சேர்க்கும். பூஜை அறைக்குள் கோலமிட்டு, குத்துவிளக்கேற்றி வைத்து,
விபூதி, சந்தனம், குங்குமம், பேனா, புத்தகம் வைத்து, புஷ்பம் அணிவித்து, தேங்காய், பழம், அவல், பொரி, கடலை, சர்க்கரை, சுண்டல் போன்றவற்றை நைவேத்தியம் படைத்து சரஸ்வதியை வழிபாடு செய்ய வேண்டும்.
வழிபாட்டின் போது சரஸ்வதிக்குரிய பாடல்களைப் பாடி தீபாராதனை காட்டுவது நலம் பயக்கும். தீப வழிபாடு செய்த பின்பு, பூஜையில் வைத்துள்ள பொருட்கள் மீது சந்தனம் தெளிக்க வேண்டும். பின்னர் அந்தப் பொருட்களை அப்படியே வைத்துவிடவேண்டும். மறுநாள் காலை விளக்கேற்றி மீண்டும் கலைவாணிக்கு தீபம் காட்டி வழிபட்ட பிறகே, அந்தப் பொருட்களை உபயோகிப்பது சிறந்தது. இதன்மூலம் கல்வி அபிவிருத்தி, செல்வ வளம், செல்வாக்கு விருத்தி அனைத்தும் ஏற்படும்.

No comments:

Post a Comment