Labels

rp

Blogging Tips 2017

தத்தெடுக்கும் பெண்களுக்கு 16 வார மகப்பேறு கால விடுமுறை அளிக்க திட்டம்

பிறந்த குழந்தை முதல் 3 மாதங்கள் வரையிலான குழந்தைகளை சட்டப்படி தத்தெடுக்கும் பெண்களுக்கு, குழந்தைப் பராமரிப்புக்காக 16 வாரங்களுக்கு மகப்பேறு கால விடுமுறை அளிக்கும் திட்டம் மத்திய அரசு பரிசீலனையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
 தத்தெடுக்கும் பெண்களுக்கும், வாடகைத் தாய் மூலம் குழந்தைப் பேறு பெறும் பெண்களுக்கும் குழந்தையைப் பராமரிக்க 12 வாரங்களுக்கு மகப்பேறு கால விடுமுறை அளிக்கும் திட்டம் உள்ளதா? என்று மாநிலங்களவையில் புதன்கிழமை கேள்வி எழுப்பப்பட்டது.

 அப்போது மத்திய தொழிலாளர் நலன், வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா எழுத்துப்பூர்வமாக அளித்த பதில்:
 பிறந்த குழந்தையில் இருந்து 3 மாதங்கள் வரையிலான குழந்தைகளைத் தத்தெடுக்கும் பெண்களுக்கும், வாடகைத் தாய் மூலம் குழந்தைப் பேறு பெறும் பெண்களுக்கும், குழந்தைகளைப் பராமரிப்பதற்காக 16 வாரங்களுக்கு மகப்பேறு கால விடுமுறை அளிக்க மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது.
 இதுகுறித்து தொழிற்சங்கங்களிடமும், தொழிலாளர்களிடமும் ஆலோசனைகள் நடைபெற்றுள்ளன.
 அதுதவிர, பொதுவாக தற்போது வழங்கப்படும் மகப்பேறுக் கால விடுமுறையை 12 வாரங்களில் இருந்து 26 வாரங்களாக உயர்த்துவதற்கான திட்டமும் உள்ளது என்று குறிப்பிட்டார்.
 அரசின் பரிசீலனையில் உள்ள மேற்கண்ட பேறு கால விடுப்புகள் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கும் பொருந்துமா? என்ற மற்றொரு கேள்விக்கு, இல்லை என்று அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா பதிலளித்தார்.

No comments:

Post a Comment