Labels

rp

Blogging Tips 2017

ரூ.2 லட்சத்தை தாண்டுகிறதா? 'பான்' எண் அவசியம்

 புதுடில்லி:கறுப்பு பணத்தை கட்டுப்படுத்தும் நோக்கில், இரண்டு லட்சம் ரூபாய்க்கு அதிகமான, அனைத்து நிதிப்பரிவர்த்தனைகளுக்கும், 'பான்' எனப்படும், நிரந்தர கணக்கு எண், விரைவில்கட்டாயமாகிறது.

லோக்சபாவில் நேற்று, துணை மானிய கோரிக்கைகள் தொடர்பான விவாதத்தின் போது, மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறியதாவது:இரண்டு லட்சம் ரூபாய்க்கு அதிகமாக மேற்கொள்ளப்படும் அனைத்து நிதிப் பரிவர்த்தனைகளுக்கும், பான் எண் கட்டாயம் என்ற அறிவிப்பு, விரைவில் வெளியாகும். உள்நாட்டில் கறுப்பு பணத்தை கட்டுப்படுத்தும் நோக்கில், இந்த நடவடிக்கை
எடுக்கப்படுகிறது.நாட்டின் பொருளாதார வளர்ச்சி, ஒன்பது சதவீதத்தை எட்டுவதற்கான வாய்ப்பு உள்ளது. இச்சூழ்நிலையில், ஜி.எஸ்.டி., எனப்படும், சரக்கு மற்றும் சேவை வரி மசோதா, ராஜ்யசபாவில் நிறைவேற, காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் உதவ வேண்டும். இம்மசோதாவை நிறைவேற விடாமல் தடுத்தால் ஏற்படும் பாதிப்புகளை, காங்., எண்ணிப்பார்க்க வேண்டும்.இந்தியாவில் வறுமை ஒழிய, பொருளாதார வளர்ச்சி அதிகரிக்க வேண்டும். வேலைவாய்ப்புகள் பெருக வேண்டும். அதன் மூலம், அரசின் நிதியாதாரம் பெருக வேண்டும். குறுகிய நோக்குடன் செயல்பட்டால், நாட்டின் ஏழைகளுக்கு பாதிப்பு ஏற்படும். இவ்வாறு அருண் ஜெட்லி கூறினார்.

ஒரு மாதத்தில்மாதிரி சட்ட வரைவு:


'ஒரு மாதத்தில், ஜி.எஸ்.டி., தொடர்பான மாதிரி சட்ட வரைவு, இறுதி செய்யப்படும்' என, மத்திய நிதியமைச்சக சிறப்பு செயலர் ராஷ்மி வர்மா கூறியுள்ளார்.டில்லியில் நேற்று, 'அசோசெம்' ஏற்பாடு செய்த கூட்டத்தில் பேசிய, ராஷ்மி வர்மா கூறுகையில், ''ஜி.எஸ்.டி., தொடர்பான மாதிரி சட்ட வரைவை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். அடுத்த ஒரு மாதத்தில், இது, இறுதி செய்யப்படும். அதன் பின், பொது தளத்தில் முன் வைக்கப்பட்டு, வர்த்தக அமைப்புகளிடம் இருந்து ஆலோசனைகள் பெறப்படும்,'' என்றார்.

No comments:

Post a Comment