Labels

rp

Blogging Tips 2017

வெள்ளம் பாதித்த 4 மாவட்டங்களுக்கு அண்ணா பல்கலை தேர்வுகள் ஒத்திவைப்பு

 வெள்ளம் பாதித்த சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் உள்ள 148 பொறியியல் கல்லூரி தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டதாக அண்ணா பல்கலை கழகம் அறிவித்துள்ளது. மேலும் 4 மாவட்ட பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான தேர்வு 28-ல் தொடங்கும். தேர்வுகளுக்கான அட்டவணை பின்னர் அறிவிக்கப்படும் என அண்ணா பல்கலை கழகம் தெரிவித்துள்ளது. முன்னதாக வெள்ளம் பாதித்த கல்லூரிகளில் மட்டும் தேர்வுகளை ஒத்திவைக்குமாறு அண்ணா பல்கலை கழகத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மழை வெள்ள பாதிப்புகளால் தேர்வை தள்ளிவைக்க அண்ணா பல்கலை கழகத்திற்கு உத்தரவிட கூறி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு நீதிமன்ற உத்தரவின்படி மாலையில் பல்கலை கழக நிர்வாகம் பதில் அளித்தது. அதில் நாளை தொடங்கும் தேர்வுகள் டிசம்பர் 28 முதல் ஜனவரி 8-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக பல்கலை கழகம் கூறியிருந்தது.
நீதிபதிகள் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த பல்கலை கழக தரப்பு வழக்கறிஞர் 125 கல்லூரிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறினார். இதனை அடுத்து வெள்ளம் பாதிக்கப்பட்ட கல்லூரிகளுக்கு மட்டும் தேர்வுகளை ஒத்திவைக்குமாறும் மீதமுள்ள கல்லூரிகளில் திட்டமிட்டபடி நாளை முதல் தேர்வுகளை நடத்துமாறும் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு உத்தரவிட்டது. மேலும் வெள்ளம் பாதித்த கல்லூரிகளின் பட்டியலை உடனடியாக பல்கலை கழக இணைய தளத்தில் வெளியிடுமாறும் அறிவுறுத்தப்பட்டது.

கிண்டி பொறியியல் கல்லூரி மற்றும் குரோம்பேட்டை எம்.ஐ.டி. கல்லூரிகளுக்கு மட்டும் தேர்வை ஜன.2-ம் தேதிக்கு தள்ளிவைத்தது போல் வெள்ளம் பாதித்த கல்லூரிகளுக்கும் தேர்வை தள்ளிவைக்கும் சாத்தியகூறுகள் பற்றி செவ்வாய் கிழமை பதில் அளிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். 

No comments:

Post a Comment