Labels

rp

Blogging Tips 2017

கடல் நீர்மட்டம் உயர்வால் மெதுவாக சுழலும் பூமி



டொரான்டோ: 'கடல் நீர்மட்டம் அதிகரித்து வருவதால், பூமியின் சுழற்சி வேகம் குறைந்து வருகிறது' என, ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து, கனடாவின் அல்பெர்டா பல்கலை பேராசிரியர், மேத்யூ டம்பெரி கூறியதாவது: புவி வெப்பம் அதிகரித்து வருவதால், துருவப் பகுதிகளில் உள்ள பனி மலைகள் வேகமாக உருகி வருகின்றன. இதனால், கடல் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது; அதுமட்டுமின்றி, துருவங்களின் அடர்த்தி குறைந்து வருவதால், பூமியின் சுழற்சி வேகம் குறைகிறது. போதாதக்குறைக்கு, நிலவின் ஈர்ப்பு சக்தியும், பூமியை மெதுவாக சுழலச் செய்கிறது. இதனால், நாட்கள் நீளும் நிலை உருவாகியுள்ளது. அடுத்த நுாற்றாண்டிற்குள், ஒரு நாள் பொழுதில், 1.7 மில்லி நொடிகள் நீளும் என, கணக்கிடப்பட்டுள்ளது. பருவ நிலை மாற்றம், கடல் நீர்மட்ட உயர்வு போன்றவற்றின் தாக்கத்தை கருத்தில் கொண்டு, கடலோர நகரங்களில், அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும்; அதற்காக, லட்சக்கணக்கான கோடிகளை கொட்ட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment