Labels

rp

Blogging Tips 2017

பள்ளிக் குழந்தைகளுக்கு உதவ காமராஜர் பெயரில் புதிய செயலி: ஜி.கே.வாசன் இன்று அறிமுகம்

தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் பள்ளிக் குழந்தைகளுக்கு உதவுவதற்காக காமராஜர் மின் ஆளுகைச் செயலி (இ-காமராஜர் ஆப்) என்கிற புதிய செயலி அறிமுகம் செய்யப்பட உள்ளது.இது தொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-
          தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் காமராஜர் மின் ஆளுகைச் செயலி அறிமுகம் செய்யப்படுகிறது. இதன்மூலம், 3 வயது முதல் 10 வயதுக்குள்பட்ட பள்ளிக் குழந்தைகள் செல்லிடப்பேசி,
மடிக்கணினியின் மூலம் தாங்களே கல்வி கற்கலாம்.கணினியில் கற்பிப்பதை குழந்தை திரும்ப, திரும்ப கேட்கலாம். செவ்வாய்க்கிழமை (டிச.22) முதல் இது எல்லோருக்கும் இலவசமாகக் கிடைக்கும். சமச்சீர் கல்வியில்இடம்பெற்றுள்ள தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடங்கள் இந்தச் செயலியில் இடம்பெறும். அதோடு, அறிவுத்திறன் பயிற்சி, ஒழுக்க நெறிகள், குழந்தைப் பாடல்கள் ஆகியவையும் இதில் இடம்பெறுகின்றன.இந்தச் செயலி தஞ்சாவூரில் செவ்வாய்க்கிழமை அறிமுகம் செய்யப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment