rp

Blogging Tips 2017

"ஆண்டுதோறும் 1 லட்சம் அங்கன்வாடிகளுக்கு புதிய கட்டடங்கள்'

அடுத்த 4 ஆண்டுகளுக்கு ஆண்டுதோறும் 1 லட்சம் அங்கன்வாடிகளுக்கு புதிய கட்டடங்கள் கட்டுவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
 இதுகுறித்து தில்லியில் மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டுத் துறை அமைச்சக மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது: நாடு முழுவதும் உள்ள அங்கன்வாடிகளில், 70 சதவீத அங்கன்வாடிகள் வாடகை கட்டடங்களில் செயல்பட்டு வருகின்றன.

 அங்கன் வாடிகளுக்கு கட்டடம் கட்ட புதிய திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. அதாவது, அடுத்த 4 ஆண்டுகளுக்கு அங்கன்வாடிகளுக்கு ஆண்டுதோறும் 1 லட்சம் புதிய கட்டடங்கள் கட்டுவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.
 இதுதொடர்பாக அங்கன்வாடிகளுக்கு கட்டடங்கள் கட்டுவதற்கான வழிகாட்டுதல்களை நடைமுறைப்படுத்தும், ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சகத்துக்கு மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டுத் துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டம், குழந்தைகள் நல மேம்பாட்டுத் திட்டம் ஆகியவற்றுக்கு ஒதுக்கப்படும் நிதியின் கீழ் அங்கன்வாடிகளுக்கு புதிய கட்டடங்கள் கட்டும் பணி செயல்படுத்தப்படும் என்றார் அந்த மூத்த அதிகாரி.

No comments:

Post a Comment