Labels

rp

Blogging Tips 2017

தொடர்பு எல்லைக்கு அப்பால் '1100': மாவட்டங்களில் அதிகாரிகள் நிம்மதி!

சமீபத்தில், முதல்வரால் துவக்கி வைக்கப்பட்ட, '1100' அம்மா அழைப்பு மையத்தை பொதுமக்கள் தொடர்பு கொண்டால், தொடர்பு எல்லைக்கு அப்பால் இருப்பதாக வரும் தகவலால் பொதுமக்கள் நொந்து போயுள்ளனர்; அதிகாரிகள் நிம்மதியடைந்து உள்ளனர்.

பொதுமக்கள், தங்களது குறைகளை, 1100 என்ற இலவச தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தெரிவித்தால், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு தெரிவித்து தீர்த்து வைக்கும், 'அம்மா அழைப்பு மையம்' ஓரிரு நாட்களுக்கு முன் சென்னையில் துவங்கப்பட்டது.'நேரில் மனு கொடுத்தாலே எந்த அதிகாரியும் செய்து கொடுப்பதில்லை. தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டால் நடக்கவா போகிறது' என்ற பொதுமக்களின் புலம்பல் இருந்தது.

சென்னையில், 138 பணியாளர்களுடன், 24 மணி நேரமும் செயல்படும்; தினசரி, 15 ஆயிரம் அழைப்புகள் வரை எடுத்துக் கொள்ளப்படும் என்பது போன்ற தகவல்களை அதிகாரிகள் எடுத்துக் கூறினர்.இதன்படி, ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் குறைகளை தெரிவிக்க, 1100ஐ தொடர்பு கொண்டால் தமிழ், இந்தி, தெலுங்கு, ஆங்கிலம் ஆகிய மொழிகளில், 'ரொம்ப பிஸி, தொடர்பு எல்லைக்கு அப்பால் உள்ளது' என்ற பதில் தான் மாறிமாறி வருகிறது. இதனால், குறைகளை தெரிவிக்க விரும்பிய மக்கள் வெறுத்து போய்விட்டனர்.மொபைல் மூலம் தொடர்பு கொண்ட பலரும், அம்மா அழைப்பு மையம், ஓரிரு நாளிலேயே செயலற்ற நிலைக்கு போய்விட்டது என குற்றம் சாட்டினர். அதே நேரத்தில், மாவட்டங்களில் உள்ள அதிகாரிகள், அழைப்பு மையம் செயல்பாடு இல்லை என்பதை அறிந்து நிம்மதியுடன் உள்ளனர்.

இது குறித்து, சேலம் வருவாய்த்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:அம்மா அழைப்பு மையம் துவங்கப்பட்டதும், ஆட்சியர், அனைத்து அதிகாரிகளையும் அழைத்து இரண்டு முறை கூட்டம் நடத்தினார். வரும் புகார்களை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு எவ்வாறு கொண்டு சேர்ப்பது, நடவடிக்கை எடுப்பது போன்ற விவரங்கள் குறித்து விளக்கப்பட்டது.ஆனால், அழைப்பு மையத்தில் இருந்து சேலம் அதிகாரிகளுக்கு இதுவரை அழைப்பு வரவில்லை. ஏற்கனவே, தேர்தல் உட்பட பலவித வேலைப்பளுவில் சிக்கி தவிக்கிறோம். தொலைபேசியில் கூறுவதை கேட்டுக் கொண்டு தேவையில்லாமல் அலைய வேண்டியிருக்கும்; அந்த பிரச்னை இப்போது இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment