Labels

rp

Blogging Tips 2017

அடக்குமுறை ஆரம்பம்-பணிக்கு செல்லும் ஊழியர்களை தடுக்கும் சங்க நிர்வாகிகளுக்கு சிக்கல்

 தமிழகத்தில் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடும் அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள், பணிக்கு செல்லும் ஊழியர்களை தடுத்தால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், சத்துணவு ஊழியர்கள், ரேஷன் கடை ஊழியர்கள் போன்றோர், பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி,
காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.சங்க நிர்வாகிகளை அரசு இன்னும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தவில்லை. அமைச்சர்களும், அதிகாரிகளும் கண்டு கொள்ளாததால், ஊழியர்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தி உள்ளனர்.
பொதுமக்கள் பாதிப்பு:
சத்துணவு ஊழியர்கள் போராட்டத்தால், பல மையங்களில் ஒரு ஊழியர் மட்டுமே பணியாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அவரும் புதிய ஊழியர் என்பதால், கலவை சாதம், முட்டை வழங்க முடியாமல் திணறி வருகின்றனர். அரசு ஊழியர்கள் ஸ்டிரைக்கால், அரசு அலுவலகங்களுக்கு செல்லும் பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர். வருவாய்த் துறையில் முதியோர் பென்ஷன், திருமண நிதியுதவி, சான்றிதழ் வழங்குதல் உட்பட பல பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

மிரட்டல்:

போராட்டம் நடத்துவோரின் கோரிக்கைக்கு உதவும் வகையில், சமீபத்தில் தாக்கலான அரசின் பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இதனால் ஏமாற்றத்தில் உள்ள ஊழியர்கள் கடும் கோபத்தில் உள்ளனர்.ஒட்டுமொத்த ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டாலும், பல அலுவலகங்களில் சில ஊழியர்கள், புதிய ஊழியர்கள் போராட்டத்தில் கலந்து கொள்ளாமலும் உள்ளனர். அவர்களை ஊழியர்கள் சங்க நிர்வாகிகள் மிரட்டுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.'உங்களுக்காக நாங்கள் வெயிலில் நிற்க வேண்டும். நீங்கள் பேன் அடியில் அமர்ந்து பணியாற்ற வேண்டுமா' என அவர்களிடம் கேட்பதால், அந்தஊழியர்கள் மிரண்டு போவதாக உளவுத்துறை போலீஸ் அரசுக்கு தெரிவித்துள்ளது.இதையடுத்து மிரட்டும் சங்க நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது. அதே நேரத்தில் புகார் தராமல் நாங்கள் யார் மீதும் நடவடிக்கை எடுக்க முடியாது என, போலீசார் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment