Labels

rp

Blogging Tips 2017

கோரிக்கைகளை நிறைவேற்றாத இடைக்கால பட்ஜெட் எதிரொலி: போராட்டத்தில் குதிக்க தயாராகிறது ஜாக்டோ அமைப்பு

ஜாக்டோ கோரிக்கை மீது அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்த்த நிலையில் ஏமாற்றம் ஏற்பட்டதால் நாளை முதல் ஜாக்டோ மீண்டும் போராட்டத்தை தொடங்க உள்ளது என்று ஜாக்டோ உயர்மட்டக்குழு அறிவித்துள்ளது. இது குறித்து ஜாக்டோ
அமைப்பின் உயர்மட்டக் குழுவின் சுழல் முறைத் தலைவர் தியாகராஜன் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை (ஜாக்டோ) சார்பில் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட அளவில் பேரணிகள், அடையாள உண்ணாவிரதம், ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம், மறியல் போராட்டம் என 5 கட்டங்களாக போராட்டங்களை நடத்தினோம். இதையடுத்து, ஜாக்டோவில் இணைந்துள்ள அனைத்து ஆசிரியர் சங்கங்களை கொண்ட ஜாக்டோ அமைப்பினரை அரசு அழைத்து பேச்சு வார்த்தை நடத்தியது.
அப்போது பங்களிப்பு ஓய்வு ஊதிய திட்டத்தை கைவிட வேண்டும், 6வது ஊதியக் குழுவின் ஊதிய முரண்பாடுகளை நீக்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து பேசப்பட்டது. பேச்சு வ ார்த்தையில் அரசு தரப்பில் கலந்து கொண்டு அமைச்சர்கள், ‘‘முதல்வரின் கவனத்துக்கு கொண்டு இடைக்கால பட்ஜெட்டில் நிறைவேற்றுவோம்’’ என்று உறுதியளித்தனர். அதனால் ஜாக்டோ தனது அடுத்தகட்ட போராட்டத்தை நிறுத்தி வைத்தது. அரசின் இடைக்கால பட்ஜெட் வரை காத்திருக்கலாம் என்று முடிெவடுக்கப்பட்டது. ஆனால், இடைக்கால பட்ஜெட்டில் ஆசிரியர்களுக்கான எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
இது ஏமாற்றத்தையும், வருத்தத்தையும் அளிப்பதாக உள்ளது. இந்த கூட்டத் தொடரில் 110 விதியின் கீழ் எங்கள் கோரிக்கையை முதல்வர் நிறைவேற்றுவார் என்று எதிர்பார்க்கிறோம். அவ்வாறு அறிவிப்பு வெளியாகவில்லை என்றால் நாளை காலை 10 மணிக்கு சென்னையில் ஜாக்டோ பொதுக்குழு கூடி அடுத்தகட்ட போராட்டத்தை தீவிரப்படுத்துவது குறித்து முடிவு எடுக்கும். ஏற்கெனவே அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் இணைந்து ெ தாடர் வேலை நிறுத்தப் போராட்டம், முற்றுகை போராட்டம் நடத்தி வரும் நிலையில் ஜாக்டோவும் இணைந்து கோட்டை நோக்கி முற்றுகை போராட்டம் நடத்துவது குறித்து ஜாக்டோ முடிவு எடுக்கும். இது குறித்து அறிவிப்பு பின்னர் அறிவிக்கப்படும். இவ்வாறு சுழல்தலைவர் தியாகராஜன் தனது அறிவிப்பில் கூறியுள்ளார்.

No comments:

Post a comment