Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

இ.பி.எப். வரி விதிப்பு ரத்து ஆகுமா? பாராளுமன்றத்தில் அறிவிப்பு வெளியாகிறது

இ.பி.எப். என்னும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி பணத்தை திரும்ப எடுக்கிறபோது, 60 சதவீத தொகைக்கு வரி விதிக்கப்படும், 40 சதவீத தொகைக்கு மட்டுமே வரி விலக்கு என்றும், இது ஏப்ரல் 1-ந் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் பட்ஜெட் உரையின்போது பாராளுமன்றத்தில் நிதி மந்திரி அருண் ஜெட்லி அறிவிப்பு வெளியிட்டார். இந்த அறிவிப்புக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.


‘தொழிலாளர்களின் வருமானத்துக்கும் வரி, சேமிப்புக்கும் வரியா?’ என கேள்வி எழுப்பி, தொழிற்சங்கங்கள் போர்க்கொடி உயர்த்தின. எதிர்க்கட்சியான காங்கிரசும் இதற்கு எதிராக குரல் கொடுத்து வருகிறது. 

தொழிலாளர்களுக்கு எதிராக பாரதீய ஜனதா கூட்டணி அரசு செயல்படுவதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியும் வருகிறது. இது தொடர்பாக பிரதமர் அலுவலகத்தில் அதிகாரிகள் மட்டத்தில் 2 தினங்களுக்கு முன் ஒரு கூட்டம் நடந்துள்ளது.

அதைத் தொடர்ந்து, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியின்மீது வரி விதிக்கும் திட்டத்தை மறுபரிசீலனை செய்யுமாறு நிதி மந்திரி அருண் ஜெட்லியை பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தி உள்ளார். குறிப்பாக, இந்த வரி விதிப்பு யோசனையை இப்போதைக்கு தள்ளிப்போடுமாறு அவர் அருண் ஜெட்லியிடம் கூறி உள்ளதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

இதையடுத்து அவரும் இ.பி.எப். மீது வரி விதிக்கும் முடிவை இப்போதைக்கு ரத்து செய்ய தீர்மானித்து உள்ளதாகவும், இது குறித்த அறிவிப்பை பாராளுமன்றத்தில் பட்ஜெட் குறித்த விவாதத்தின்போது அவர் வெளியிட இருப்பதாகவும் தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

No comments:

Post a Comment