Labels

rp

Blogging Tips 2017

தேர்வுப்பணியில் 'ஆப்சென்ட்' ஆசிரியர்கள்: மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் அதிர்ச்சி

சேலம் மாவட்டத்தில், பிளஸ் 2 பொதுத்தேர்வுகளுக்கு, பணிநியமன ஆணை பெற்றும், பணிக்கு செல்லாமல் பல ஆசிரியர்கள் அலட்சியம் காட்டிய சம்பவம்அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. பணிக்குவராமல் இருந்த ஆசிரியர்களிடமிருந்து விளக்கக்கடிதம் பெறப்பட்டுள்ளது.

பிளஸ் 2 பொதுத்தேர்வு நேற்று முன்தினம் துவங்கியது. சேலம் மாவட்டத்தில், 99 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில், 2,000த்தும் மேற்பட்ட முதுகலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் அறை கண்காணிப்பாளர்களாக நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கு முன்கூட்டியே நியமன ஆணை வழங்கப்பட்டது. தேர்வு நாளன்று குளறுபடி தோன்றக்கூடாது என்பதற்காக, தேர்வுக்கு முன், மார்ச், 2ம் தேதி முன் ஆயத்தக்கூட்டமும் நடத்தப்பட்டது.ஆயினும், நேற்று முன்தினம் தேர்வு நாளன்று, 40க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தேர்வுப்பணிக்கு வரவில்லை. இதனால், கல்வித்துறை அலுவலர்கள், அவசர அவசரமாக, வேறு ஆசிரியர்களுக்கு, மறு நியமன ஆணை வழங்கி, தேர்வு நடத்தினர். கடந்த முறை கிருஷ்ணகிரியில் நடந்த முறைகேடு சம்பவமும், இதுபோன்ற குளறுபடிகளால் அதே பள்ளி ஆசிரியர்களை நியமித்ததால் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால், அதிர்ச்சியடைந்த மாவட்டக்கல்வி நிர்வாகம், தேர்வுப்பணிக்கு வராத முதுகலை ஆசிரியர்கள் அனைவரும், குகை மேல்நிலைப்பள்ளியில் ஆஜராக உத்தரவிடப்பட்டது. இதில், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ஞானகவுரி கலந்து கொண்டு, தேர்வுக்கான நியமன ஆணை பெற்றும், தேர்வுப்பணிக்கு வராமல் இருந்ததற்கான விளக்கக்கடிதத்தை பெற்றுக்கொண்டு, ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். தேர்வு பணியில் வேண்டுமென்றே அலட்சியப்போக்குடன் இருந்த ஆசிரியர்கள் மீது, துறை ரீதியான நடவடிக்கை பாயும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment