Labels

rp

Blogging Tips 2017

பி.எப்., நிதிக்கு வரியா? மத்திய அரசு விளக்கம்

புதுடில்லி: பி.எப்., நிதியை ஓய்வுக்கு பிறகு திரும்பப் பெறும்போது, வருமான வரி வசூலிக்கப்படும் என தகவல் வெளியாகின. இது தொடர்பாக மத்திய வருவாய் துறை செயலர் ஹஸ்முக் ஆதியா கூறுகையில், தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதியை ஓய்வுக்கு
பின் திரும்பப்பெறும்போது வரி வசூலிக்கப்பட மாட்டாது. தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதிக்கு அளிக்கப்படும் 60 சதவீதம் பங்களிப்புக்கான வட்டித்தொகை மீது மட்டுமே வரி விதிக்கப்படும். அதுவும் இத்திட்டம் ஏப்ரல் 1 2016ல் தான் அமலாகும். மேலும், குறைந்த அளவு மாத சம்பளம், மாதம் ரூ.15 ஆயிரம் வரை பெறும் ஊழியர்களுக்கு இனி பி.எப்., வரி விதிப்பு முறையிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது எனக்கூறினார்.

No comments:

Post a Comment