Labels

rp

Blogging Tips 2017

மருத்துவ மாணவர் சேர்க்கை 2016-17-க்கு தேசிய அளவில் ஒரே நுழைவுத் தேர்வு: உச்ச நீதிமன்றம் உத்தரவு

அகில இந்திய பொது மருத்துவ நுழைவுத் தேர்வை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதற்கான தேதியையும் உச்சநீதிமன்‌றம் அறிவித்துள்ளது

இதுதொடர்பான வழக்கு நீதிபதிகள் அனில் ஆர்.தவே, ஏ.கே.கோயல், சிவ் கீர்த்தி சிங் அடங்கிய சிறப்பு அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் பிங்கி ஆனந்த், மத்திய அரசு நுழைவுத் தேர்வினை மூன்று கட்டங்களாக நடத்த விரும்புவதாக தெரிவித்தார். 2 கட்ட தேர்வுகளுக்கு தேதி அறிவிக்கப்பட்டிருப்பதாகவும், நீதிமன்றம் விரும்பினால் மூன்றாம் கட்ட தேர்வை ஜூன் மாதத்தில் நடத்த தயார் என்றும் அவர் தெரிவித்தார்.


இதற்கு கடும் எதிர்ப்பு தமிழக அரசின் வழக்கறிஞர் நாகேஸ்வர ராவ், தமிழகத்தில் 2007ஆம் ஆண்டு முதல் நுழைவுத் தேர்வு என்பதே இல்லை என்றும், புதிததாக நுழைவுத் தேர்வு நடத்தினால் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று எடுத்துரைத்தார். தமிழக்த்தில் நுழைவுத் தேர்வை ரத்து செய்து சட்டம் இயற்றப்பட்டுள்ளதாகவும், ஒருவேளை தேர்வு தேதி அறிவிக்கப்பட்டால், தமிழகத்திற்கு விலக்களிக்க வேண்டும் என்றும் நாகேஸ்வர ராவ் கேட்டுக் கொண்டார். பொது நுழைவுத் தேர்வு நடத்துவதில் உச்ச நீதிமன்றம் அவசர கதியில் முடிவு எடுக்க வேண்டாம் என்று பிற மாநிலங்களும் கேட்டுக் கொண்டன. இதற்கு பதில் அளித்த மத்திய அரசு வழக்கறிஞர், நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்படுவதற்கு முன்பு, ஏப்ரல் மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டு, ஜூன் மாதத்தில் தேர்வு நடைபெற்று வந்ததாகவும், தற்போதும் அதுபோல் நடத்தலாம் என்றும் தெரிவித்தார்.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், அகில இந்திய அளவில் பொது நுழைவுத் தேர்வை நடத்த உத்தரவிட்டனர். மத்திய அரசின் பரிந்துரைப்படி முதல்கட்ட நுழைவுத் தேர்வு மே ஒன்றாம் தேதியும், இரண்டாம‌ கட்ட நுழைவுத் தேர்வை ஜூலை 24ம் தேதியும் நடத்த நீதிபதிகள் உத்தரவிட்டனர். ஆகஸ்ட் 17ம் தேதி முடிவு வெளியிடவும், செப்டம்பர் 30ம் தேதிக்குள் கலந்தாய்வு, மாணவர் சேர்க்கை உள்ளிட்டவற்றை முடிக்க வேண்டும என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment