Labels

rp

Blogging Tips 2017

மருத்துவ படிப்புகளுக்கு பொது நுழைவுத்தேர்வு: சுப்ரீம் கோர்ட் அனுமதி

மருத்துவ படிப்புகளுக்கு தேசிய அளவில் பொது நுழைவுத்தேர்வு நடத்த சுப்ரீம் கோர்ட் அனுமதி வழங்கியுள்ளது. 2013ல் பிறப்பித்த தடையை சுப்ரீம் கோர்ட் ரத்து செய்துள்ளது.
இந்திய மருத்துவக் கவுன்சிலின் பரிந்துரையின் படி, தேசிய அளவில் இளங்கலை மற்றும் முதுகலை மருத்துவப் பட்டப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு நடத்த, சுகாதார துறை முயற்சியை மேற்கொண்டது. இது தொடர்பாக, தனியார் மருத்துவக் கல்லுாரிகள் தொடர்ந்த வழக்கில், அரசின் இந்த முயற்சிக்கு சுப்ரீம் கோர்ட், 2013ல் தடை விதித்தது. மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வில், நீதிபதிகள் அல்தமாஸ் கபீர், விக்ரம்ஜித் சென் ஆகியோர் தடை விதித்த அதே நேரத்தில், மற்றொரு நீதிபதியான அனில் தவே, அரசின் முயற்சிக்கு ஆதரவு தெரிவித்தார்.

நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை அளித்ததால்,இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும் என, சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசும், இந்திய மருத்துவ கவுன்சிலும் மனு தாக்கல் செய்துள்ளது.

இந்த மனுவை இன்று விசாரித்த சுப்ரீம் கோர்ட், கடந்த 2013ல் பிறப்பித்த தடையை ரத்து செய்துள்ளது. இந்த வழக்கில் பொது நுழைவுத்தேர்வு நடத்துவது குறித்து மீண்டும் விசாரணை நடைபெறும். அது வரை தேசிய அளவில் பொது நுழைவுத்தேர்வு நடத்தலாம் எனக்கூறியுள்ளது. நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளுக்கு 90 நுழைவுத் தேர்வுகள் நடைபெறுகின்றன.

பல்வேறு நுழைவுத் தேர்வு காரணமாக மாணவர்கள் விண்ணப்பங்கள், நுழைவுத்தேர்வு, அலைச்சல் காரணமாக ஆயிரகணக்கில் செலவு செய்வதாகவும், சிலர் மற்றவர்களின் வாய்ப்புகளை பறித்துக்கொள்வதாக இந்திய மருத்துவ கவுன்சில் அதிகாரி ஒருவர் கூறினார்.

No comments:

Post a Comment