Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வை தடுத்து நிறுத்த வேண்டும்: கருணாநிதி வலியுறுத்தல்

மருத்துவ படிப்புக்கு நுழைவுத் தேர்வு நடத்துவதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், தமிழகத்தில் பல ஆண்டுகளாக நுழைவுத் தேர்வு இல்லாமலேயே பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வந்திருப்பதாகவும்,
தற்போதைய உச்சநீதிமன்ற உத்தரவு தமிழக மாணவர்களிடையே அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தி இருப்பதாகக் கூறியுள்ளார். தமிழகத்திற்கு மட்டுமாவது நுழைவுத் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க தமிழக அரசு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என கருணாநிதி கூறியுள்ளார். மத்திய அரசும், மாநில அரசும் சமூக நீதி அடிப்படையிலான நுழைவுத் தேர்வு ரத்து என்பதைக் காப்பாற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment