Labels

rp

Blogging Tips 2017

சட்டப் படிப்பை விலைக்கு விற்கும் "லெட்டர்பேடு' கல்லூரிகள் மீது நடவடிக்கை தேவை: உயர்நீதிமன்றம் உத்தரவு

சட்டப் படிப்பை விலைக்கு விற்கும் "லெட்டர்பேடு' சட்டக் கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அகில இந்திய பார் கவுன்சிலுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

தஞ்சாவூரைச் சேர்ந்த பி.ராமு, 1966 முதல் 2001 வரை தமிழக அரசின் விவசாயத் துறையில் இளநிலைப் பொறியாளராகப் பணிபுரிந்தார். 2001-இல் பெங்களூருவிலுள்ள ஒரு சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பை முடித்துள்ளார். வழக்குரைஞராகப் பதிவு செய்ய முயன்றபோது, "அரசுப் பணியில் இருந்து கொண்டே எப்படி படித்தீர்கள்' என தமிழ்நாடு பார் கவுன்சில் மறுத்துள்ளது.


இதையடுத்து, வழக்குரைஞராகப் பதிவு செய்ய உத்தரவிடக் கோரியும், பார் கவுன்சில் விதிமுறைகளையும் தளர்த்தக் கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் பி.ராமு மனு தாக்கல் செய்தார்.

  இந்த மனு நீதிபதிகள் வெ.ராமசுப்பிரமணியன், என்.கிருபாகரன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

  மனுதாரர் 2001 வரை அரசு ஊழியராக இருந்துள்ளார். ஆனால், 1998 முதல் 2001 இடைப்பட்ட காலத்தில் எப்படி சட்டப் படிப்பை முழு நேரமாகப் படித்தார் என்பது புரியவில்லை. விடுப்பு எடுத்துப் படித்ததாகக் கூறும் மனுதாரர், ஆதாரங்களை இதுவரை சமர்ப்பிக்கவில்லை.

இது போன்ற சட்டப் படிப்புகளை விலைக்கு விற்கும் "லெட்டர்பேடு' கல்லூரிகள் மீது   அகில இந்திய பார் கவுன்சில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்குப் பதிலாக, மனுதாரருக்கு ஒரு வாய்ப்பு அளிக்க வேண்டும் என கூறியிருப்பது வேடிக்கையாக உள்ளது.

கிரிமினல்களும், ரௌடிகளும் வழக்குரைஞர் போர்வையில் உலா வருவதற்கு இது போன்ற கல்லூரிகளைத்தான் மொத்தமாக ஏலம் எடுக்கின்றனர். இந்தக் கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும். இல்லையெனில், அது சமுதாயத்துக்கு பெரும் ஆபத்தை விளைவிக்கும்.

வழக்குரைஞர் பதிவு விவகாரத்தில், தமிழ்நாடு பார் கவுன்சில் சரியான முடிவை எடுத்துள்ளது என உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment