Labels

rp

Blogging Tips 2017

"ஓபி" அடித்த 33 அதிகாரிகளை வீட்டுக்கு அனுப்பி மத்திய அரசு அதிரடி

: சரியாக வேலை செய்யாமல் சம்பளம் வாங்கி வந்த 33 அதிகாரிகளை மத்திய அரசு, முதன்முறையாக கட்டாய ஓய்வு கொடுத்து வீட்டுக்கு அனுப்பி உள்ளது. இது பல அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.கடந்த மாதம் அனைத்து மத்திய அரசு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். அப்போது செயல்படாமல் இருந்து வரும் அதிகாரிகளை பணிநீக்கம் செய்து
நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதன்படி பல காலமாக செயல்படாமல் இருந்து வந்த அதிகாரிகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டு வந்தது. இதில் தற்போது, வேலை செய்யாமல் இருந்து வந்த வருமான வரித்துறையை சேர்ந்த 33 அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவர்களில் 7 பேர் ஏ கிரேடு அதிகாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி நேற்று கூறுகையில், கடந்த 2 ஆண்டுகளில் மட்டும், செயல்படாமல் இருந்து வந்த 72 அதிகாரிகள் மீது பணிநீக்கம், ஓழுங்கு நடவடிக்கை உள்ளிட்டவைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதன்படி தற்போது வருமான வரித்துறையில் செயல்படாமல் இருந்து வந்த 33 அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது போன்று இருப்பவர்களை மாற்ற தற்போதைய அரசு பல்வேறு நடவடிக்கைகளில் இறங்கி உள்ளது என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment