Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

ADMK MANIFESTO-2016 ---. பள்ளிக் கல்வி மேம்பாடு :உயர்கல்வி மேம்பாடு :


  • 8. பள்ளிக் கல்வி மேம்பாடு :
  • 11-ஆம் வகுப்பு/12-ஆம் வகுப்பு பயிலும் மாணாக்கர்களுக்கு விலையில்லா மடிக் கணினிகள் வழங்கப்படும் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும். 
  • இந்த மடிக் கணினியுடன், கட்டணமில்லா இணையதள இணைப்பு வசதியும் மாணாக்கர்களுக்கு வழங்கப்படும்.
  • பள்ளி மாணாக்கர்களுக்கான பல்வேறு திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
  • பள்ளிக் கல்வியின் தரம் உயர்த்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
  • உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் இணையதளம் வாயிலான ஒருங்கிணைந்த பயிலும் திட்டம் செயல்படுத்தப்படும்.
  • பள்ளிகளில் தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும்.
  • நலிவுற்ற மற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினருக்கு தனியார் பள்ளிகளில் பயில வழங்கப்படும் ஒதுக்கீடு தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
  • 9. உயர்கல்வி மேம்பாடு :
  • புதிய கல்லூரிகள் தேவைக்கேற்ப துவங்கப்படுவதுடன், அனைத்து கல்லூரிகளின் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும்.
  • கல்லூரிகளில் கல்வித் தரம் உயர்த்தப்படும்.
  • பல்கலைக்கழகங்கள் மேக கணினியம் (ஊடடிரன ஊடிஅயீரவiபே) மூலம் இணைக்கப்பட்டு, மாணாக்கர்கள் கல்வித் திறன் உயர வழிவகை செய்யப்படும்.
  • தொழில் நிறுவனங்களுடன் இணைந்து கல்லூரிகளில் பயிலும் மாணாக்கர்கள் விடுமுறை காலங்களில் வேலை வாய்ப்பு பெறுவதற்கான பயிற்சிகள் பெற நடவடிக்கை எடுக்கப்படும்.

No comments:

Post a Comment