Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

அங்கீகாரம் புதுப்பிக்க பள்ளிகளுக்கு எச்சரிக்கை

பள்ளிக்கல்வி இயக்குநர் கண்ணப்பன் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் நூற்றுக்கணக்கானவை தொடர் அங்கீகாரம் இன்றி செயல்பட்டு வருகின்றன. இப்பள்ளிகள் தங்களது அங்கீகாரத்தை உரிய முறையில் புதுப்பித்துக் கொள்ள வேண்டும். அங்கீகாரத்தை புதுப்பிக்காத பள்ளிகளில் காலி பணியிடம் நிரப்ப அனுமதி,
நியமன ஏற்பு, ஓய்வு பெறும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லா பணியாளர்கள் ஓய்வூதியம் உள்ளிட்ட பணப்பலன்கள், சரண் விடுப்பு, ஆகியவற்றை பெற்றுத்தர பள்ளி நிர்வாகங்கள் தாமதம் செய்வதாக கல்வித்துறை இயக்குநரகத்திற்கு புகார்கள் வருகின்றன.

 இதில், ஓய்வு பெற்றவர்களின் பணப்பலன்களை பெற்றுத்தரும் வகையில் மே 12க்குள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் அறிக்கை சமர்ப்பிக்கவேண்டும்.  இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment