Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

பள்ளி திறக்கும் நாளில் மாணவர்களுக்கு விலையில்லா நலத் திட்டம்:

நிகழ் கல்வியாண்டில் பள்ளிக் கல்வித் துறையில் செயல்படுத்தப்பட வேண்டிய திட்டங்கள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. ஜூன் 1-ஆம் தேதியன்று, பள்ளிகள் திறக்கும் போது அனைத்துப் பள்ளிகளிலும் மேற்கொள்ளப்பட வேண்டிய தூய்மை மற்றும் சுகாதாரப் பணிகள் குறித்து அறிவுறுத்தப்பட்டது.வரும் கல்வியாண்டில் மாணவர்களுக்கான விலையில்லா நலத் திட்டங்களுக்காக ரூ. 3,300 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அந்த நலத்திட்டங்கள் மாணவர்களுக்கு உரிய நேரத்தில் வழங்குவது குறித்து திட்டமிடும் வகையில், பள்ளி திறக்கும் நாளன்றே மாணவர்களுக்கான விலையில்லா பாடப் புத்தகங்கள், நோட்டுபுத்தகங்கள், விலையில்லா புவியியல் வரைப்படம், விலையில்லா சீருடைகள் மற்றும் இதர மாணவர்கள் நலத்திட்ட பொருள்களும் வழங்குவதற்குத் தேவையான ஆயத்தப் பணிகளும் மேற்கொள்ள பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பா. பெஞ்ஜமின் அறிவுரைகள் வழங்கினார்.இந்தக் கூட்டத்தில் ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் விபுநாயர், தமிழ்நாட்டுப் பாட நூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக மேலாண்மை இயக்குநர் மைதிலி கே. இராஜேந்திரன், அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மாநில திட்ட இயக்குநர் பூஜா குல்கர்னி, அரசு துணைச் செயலர் ராகுல் நாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment