Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

முதியோர் பென்ஷன் விதிமுறை தளர்வு: குவியும் மனுக்களால் அதிகாரிகள்திணறல்

உழைக்க முடியாத, ஆதரவற்ற நிலையில் உள்ள முதியோர், விதவைகள், கணவனால் கை விடப்பட்டோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு, சமூக பாதுகாப்புத் திட்டத் தின் கீழ், மாதம், 1,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது;
மாநிலம் முழுக்க, 35 லட்சம் பேர் பயன் பெற்று வந்தனர். இத் திட்டத்தில், தகுதி இல்லாதோர் வசதி படைத்தோர் கூட, பென்ஷன் பெற்றதால், அரசு, நிதி வீணாகிறது என்ற சர்ச்சை எழுந்தது.
இதையடுத்து, கடந்தாண்டு துவக்கத்தில்,
மாநிலம் முழுக்க, பென்ஷன் பெறும் போலிகளை கண்டறியும் பணியில் தீவிரம் காட்டிய அரசு, ஏழு லட்சம் பேரின் உதவித் தொகையை ரத்து செய்தது. 'பென்ஷன் விவகாரத்தில், 50 ஆயிரம் ரூபாய் சொத்து மதிப்பு, மகன்களே இல்லாத ஆதரவற்றோர் மட்டுமே, முதியோர் பென்ஷனை பெற முடியும்' என, விதிமுறையை வகுத்தது.
இதிலும், 'தகுதியுள்ள பலருக்கும் பென்ஷன் நிறுத்தப்பட்டது' என்ற விமர்சனமும் எழுந்தது. ஆயிரக்கணக்கில் பெறப்பட்ட புதிய விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படாமல், முடக்கி வைக்கப்பட்டன. 

தேர்தல் நெருங்கிய நிலையில், பல இடங்களிலும் முதியோர் பென்ஷன் வழங்க கோரி, போராட்டங்கள் நடந்தன. தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வரும் முன், ஓட்டு வங்கியை, 'குறி' வைத்து, 'பென்ஷன் கிடைக்காமல்விடுபட்டோர், உரிய ஆவணங்களை மீண்டும் சமர்ப்பிக்கலாம்' என, அரசு அறிவித்தது.
தவிர, 50 ஆயிரம் ரூபாய் சொத்து மதிப்பு வைத்துள்ள முதியோர், மகன்கள் இருந்தும், ஆதரவற்றவர்களுக்கு பென்ஷன் வழங்கலாம் என, விதிமுறை
தளர்த்தப்பட்டது. புதிய அரசு பொறுப்பேற்ற நிலையில், கடந்த வாரம் மாவட்டந்தோறும் ஜமாபந்தி நடந்தது; 90 சதவீத மனுக்கள், முதியோர் பென்ஷன் வேண்டி வழங்கப்பட்டுள்ளன. இதனால், அதிகாரிகள் திணறி வருகின்றனர்.
வருவாய் துறையினர்:வருவாயை கணக் கிட்டு, விதிமுறையில் கிடுக்கிப்பிடி காட்டிய அரசு, தன் நிலையை தளர்த்தியதால், மனுக் கள் குவிகின்றன. தகுதியுள்ள விண்ணப்ப தாரர்களுக்கு, முதியோர் பென்ஷன் வழங்கி வருகிறோம்.- நமது நிருபர் --

No comments:

Post a Comment