Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

பள்ளிகள் இன்று திறப்பு

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள், ஒரு மாத கோடைவிடுமுறைக்குப் பின், இன்று மீண்டும் திறக்கப்படுகின்றன.
தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில், உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளுக்கு, ஏப்., 22முதல் கோடை விடுமுறை விடப்பட்டது. தொடக்கப் பள்ளிகளில் ஆண்டு இறுதி தேர்வு முடிந்து, மே, 1 முதல் கோடை விடுமுறை அளிக்கப்பட்டது. 'ஜூன், 1ல், மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும்' என, பள்ளிக் கல்வி துறை ஏற்கனவே உத்தரவிட்டு இருந்தது.ஆனால், சென்னை உள்ளிட்டதமிழகத்தின் முக்கிய நகரங்களில், கோடை வெப்பம்

கடுமையாக இருந்ததால், விடுமுறையை நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், பள்ளிக் கல்வி துறையின் புதிய அமைச்சர் பெஞ்சமின் தலைமையில் நடந்த, முதல் ஆய்வு கூட்டத்தில், இதற்கு ஒப்புதல் அளிக்கப்படவில்லை.இதையடுத்து, திட்டமிட்டபடி, இன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றன.இன்றே, மாணவர்களுக்கு அரசின்இலவச பாட புத்தகங்கள், சீருடை மற்றும் நோட்டு புத்தகங்கள் வழங்கப்படும். சில தனியார் மெட்ரிக் பள்ளிகள்,ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் ஜூன், 6ல் திறக்கப்படுகின்றன. சிலசி.பி.எஸ்.இ., பள்ளிகள் ஜூன், 8லும்,சில பள்ளிகள் ஜூன், 15ம் தேதியும் திறக்கப்பட உள்ளன

No comments:

Post a Comment